திரைப்பிரபலங்கள் மூலம் பிரபலமாகும் ஆடைகள்
சினிமா நட்சத்திரங்கள் அணியும் ஆடைகள் மீது ரசிகர்களுக்கு எப்போதுமே ஒரு மோகம் உண்டு. படங்களில் நடிகர், நடிகைகள் அணியும் ஆடைகள் சில சமயங்களில் மார்க்கெட்டில் செம்ம டிமாண்டும் ஏற்படும். அந்த வகையில் திரைப்பிரபலங்கள் விரும்பி அணியும் Balmain என்கிற டீ-ஷர்ட் தான் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.
Balmain டீ-ஷர்ட்
நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த வாரம் டிஜிட்டல் விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அதில் அவர் கருப்பு நிற ஜீன்ஸ் பேண்ட்டும், அதே நிறத்தில் Balmain டீ-ஷர்ட்டும் அணிந்து வந்திருந்தார். சிம்பிளாகவும், ஸ்டலிஷாகவும் இருந்த இந்த டீ-ஷர்ட்டின் விலையை இணையத்தில் தேடிய ரசிகர்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சியது.
டீ-ஷர்ட் விலை ரூ.45 ஆயிரம்
ஏனெனில் இந்த டீ-ஷர்ட்டின் விலை 557 டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.45 ஆயிரமாம். திரைப்பிரபலங்களின் பேவரைட் பிராண்ட் ஆகவும் Balmain இருந்துள்ளது. பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக்கான், சல்மான் கான், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, டோலிவுட் ஸ்டார் அல்லு அர்ஜுன், கோலிவுட்டில் சிம்பு, விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயன் என ஏராளமானோருக்கு இது பேவரைட் டீ ஷர்ட்டாம்.
என்ன ஸ்பெஷல்..?
இந்த டீ-ஷர்ட்டில் என்ன ஸ்பெஷல் என்றால், அது அதனை தயாரிக்கும் Balmain என்கிற நிறுவனம் தான். பாரிஸை மையமாகக் கொண்ட இந்நிறுவனம் தரமான ஆடைகள், ஜாக்கெட்டுகள் மற்றும் அணிகலன்களை தயாரிப்பதில் முன்னிலை வகிக்கிறது. Balmain ஆடைகள் இத்தாலி, சீனா, ஜப்பான், பல்கேரியா, போர்ச்சுகல், போலந்து ஆகிய நாடுகளில் தயாரிக்கப்படுகின்றன.