விஜய் டிவி 'செந்தூரப்பூவே' சீரியலில் இருந்து விலகிய தர்ஷா குப்தா! இனி இவருக்கு பதில் நடிப்பது யார் தெரியுமா?

Published : Aug 04, 2021, 06:14 PM IST

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றான, 'செந்தூர பூவே' சீரியலில் இருந்து தற்போது தர்ஷா குப்தா விலகி விட்டதாகவும், இவருக்கு பதில் நடிக்க உள்ள நடிகை குறித்த புகைப்படமும் வெளியாகி உள்ளது.  

PREV
17
விஜய் டிவி 'செந்தூரப்பூவே' சீரியலில் இருந்து விலகிய தர்ஷா குப்தா! இனி இவருக்கு பதில் நடிப்பது யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. அந்த நிகழ்ச்சியில் புகழ், தர்ஷா காம்பினேஷ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. 

27

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரும் முன்னரே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘முள்ளும் மலரும்’, சன் டி.வி.யில் ‘மின்னலே’, விஜய் டி.வி.யில் ‘செந்தூரப்பூவே’ போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

37

இருந்தாலும் தர்ஷா குப்தாவை  பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமாக்கியது குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி தான். 

47

தற்போது திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து மீண்டும் ஒரு படத்தை எடுக்க இருக்கிறார் மோகன். அந்த படத்திற்கு ‘ருத்ர தாண்டவம்’  என பெயரிட்டுள்ளார். அதில் தர்ஷா குப்தா கதாநாயகியாக நடித்துள்ளார். 

57
dharsha gupta

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் தர்ஷா குப்தா அவ்வப்போது அசத்தலான போட்டோ ஷூட்களை நடத்தி, வெளியிட்டு வருவது மட்டும் இன்றி, கொரோனா காலத்தில் உணவில்லாமல் கஷ்டப்பட்ட பலருக்கு பல்வேறு உதவிகளை செய்து , அதன் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.

67

தற்போது இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வருவதால், சீரியலில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் ஹிட் சீரியலான 'செந்தூர பூவே' சீரியலில் இருந்து விலகியுள்ளார்.

77
dharsha gupta

dharsha gupta

click me!

Recommended Stories