1980ல் தர்மேந்திரா முதல் மனைவி பிரகாஷ் கௌரை விவாகரத்து செய்யாமல் ஹேமமாலினியை இரண்டாவதாக திருமணம் செய்ததால், அவர் மீது மதமாற்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஹேமமாலினி தனது அற்புதமான நடிப்பு மற்றும் அழகால் 'கனவுக்கன்னி'யாகப் பெயர் பெற்றாலும், அவரது வாழ்க்கையில் சர்ச்சைகளில் சிக்கிய சில தருணங்களும் இருந்தன. அதில் ஒன்றுதான் அவரது திருமணம். 1980ம் ஆண்டு மே 2ந் தேதி அன்று ஹேமமாலினியும் தர்மேந்திராவும் திருமணம் செய்து கொண்டனர். தர்மேந்திரா தனது முதல் மனைவி பிரகாஷ் கௌரை விவாகரத்து செய்யாமல் ஹேமமாலினியை இரண்டாவதாக திருமணம் செய்தார், இது இந்து திருமணச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது.
24
மதம் மாறினாரா ஹேமமாலினி?
1979-ல் தர்மேந்திரா மற்றும் ஹேம மாலினி இருவரும் இஸ்லாம் மதத்திற்கு மாறி திருமணம் செய்து கொண்டதாக ஒரு தகவல் வெளிச்சத்திற்கு வந்தது. இஸ்லாத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களுக்கு எந்தத் தடையும் இல்லை. முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்ய தர்மேந்திரா தனது பெயரை திலாவர் என்றும், ஹேமா தனது பெயரை ஆயிஷா பி என்றும் மாற்றிக்கொண்டதாகக் கூட கூறப்பட்டது. முதல் மனைவி உடனான விவாகரத்துக்கு பின்னரே தர்மேந்திரா - ஹேமாவை ஐயங்கார் முறைப்படி இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.
34
சர்ச்சை குறித்து ஹேமமாலினி என்ன கூறினார்?
ராம் கமல் முகர்ஜியின் 'ஹேமமாலினி: பியாண்ட் தி ட்ரீம் கேர்ள்' என்ற புத்தகத்தில், தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஹேமமாலினி கூறுகையில், "யாராவது பெரிய காரியத்தைச் செய்யும்போது, சிலர் அவர்களைப் பின்னுக்குத் தள்ள முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர் (தர்மேந்திரா) வெற்றி பெறுவார் என்று நான் நம்புகிறேன்" என்று கூறியிருந்தார். தர்மேந்திரா ஏன் பிரமாணப் பத்திரத்தில் தன்னை இரண்டாவது மனைவியாகக் குறிப்பிடவில்லை என்று ஹேமாவிடம் கேட்டபோது, அவர், "இது எங்களுக்கு இடையேயான தனிப்பட்ட விஷயம். நாங்கள் அதை எங்களுக்குள் தீர்த்துக் கொள்வோம். வேறு யாரும் இதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை" என்றார்.
அதே நேரத்தில், திருமணத்திற்காக இஸ்லாம் மதத்திற்கு மாறியது மற்றும் பெயர் மாற்றியது குறித்த செய்திகளுக்கு பழைய பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்த தர்மேந்திரா, "இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை. நான் என் சுயலாபத்திற்காக மதம் மாறும் ஆள் இல்லை" என்றார். "இந்தக் குற்றச்சாட்டில் ஏதேனும் உண்மை இருந்தால், யாராவது அதை ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும். அது பொய்யாக இருந்தால், மக்கள் முடிவு செய்யட்டும்" என்றார்.