எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன், தேவகியையும் அவரது மகன் ராணாவையும் கொல்ல ஆள் அனுப்பி இருந்த நிலையில், அடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தி, தனுஷ் கோடிக்கு சென்று கண்ணதாசன் என்பவரை சந்திக்க, அவர் தேவகி பற்றிய உண்மைகளை ஒவ்வொன்றாக சொல்கிறார். அவர் சொத்துக்களையெல்லாம் ஆதி முத்து எழுதி வாங்கிவிட்டு, தேவகியை திருமணம் செய்துகொண்டதாகவும், ஆதி முத்து இறந்த பின்னர் ஆதி குணசேகரன் வந்து தேவகியை மிரட்டிய கதையையும் கண்ணதாசன் சொல்ல, அதையெல்லாம் போன் வாயிலாக ஜனனி, நந்தினி, ரேணுகா ஆகியோர் கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள். இதையடுத்து எதிர்நீச்சன் தொடர்கிறது சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
தேவகியை கொலை செய்ய துரத்திய ஆதி குணசேகரன்
ஆதி குணசேகரன், 30 வருஷத்துக்கு முன்னாடி தெரிஞ்சே செஞ்ச ஒரு செயல் தற்போது அவரை எமனாக துரத்துகிறது. கெளரவத்துக்காக ஒரு அப்பாவி பெண்ணை அவர் கொலை செய்ய துணிந்ததை தெரிந்துகொள்கிறார் சக்தி. தேவகியையும் அவருடைய மகன் ராணாவையும் கொலை செய்ய ஆதி குணசேகரன் ஆட்களை அனுப்ப, அவர்களிடம் இருந்து தப்பித்துவிடுகிறார் தேவகி. இதையடுத்து இராமேஸ்வரத்தில் இருந்து வந்து தனுஷ்கோடியில் செட்டிலாகிவிடுகிறார் தேவகி. அப்போது தான் அவரை சந்தித்திருக்கிறார் கண்ணதாசன். அவரிடம் நடந்தவற்றை எல்லாம் சொல்லி கண்ணீர்விட்டிருக்கிறார் தேவகி.
34
தேவகி என்ன ஆனார்?
பின்னர் எப்படியோ தேவகி இருந்த இடத்தை கண்டுபிடித்த ஆதி குணசேகரன், உனக்கு இந்த உலகத்துல ஓடி ஒளிய கூட இடமில்ல பாத்தியா... உன்னை பெரிய இடத்துக்கு மேல அனுப்புறேன் என சொல்லி, ராணா கண்முன்னரே தேவகியை குத்திக் கொன்றுவிடுகிறார் ஆதி குணசேகரன். தன் கண்முன்னே தன்னுடைய அம்மாவை கொன்றதால் ஆத்திரமடையும் ராணா, சிறு வயதிலேயே இதற்கு காரணமான ஆதி குணசேகரன் மட்டுமல்ல, அவன் குடும்பத்தையே கொல்லுவேன் என சபதமெடுத்து, அந்த ஊரைவிட்டே ஓடிவிடுகிறார். ஆதி குணசேகரன் கொலை செய்த விஷயத்தை அறிந்து நந்தினி வெட வெடத்துப் போகிறார்.
கண்ணதாசனிடம் ராணா எங்கு இருக்கிறான் என்பது தெரியுமா என சக்தி கேட்கிறார். அதற்கு அவர், அவன் எங்க இருக்கான்னு சொல்லி நான் உன்னை கஷ்டப்படுத்த விரும்பல என கூறுகிறார் கண்ணதாசன். இதனால் யார் அந்த ராணா என்கிற எதிர்பார்ப்பு எழத் தொடங்கி உள்ளது. ஒருவேளை சக்தி தான் ராணாவாக இருப்பாரா? அல்லது ஆதி குணசேகரனின் வீட்டை விலைபேச வந்த அந்த மர்ம நபர் தான் ராணாவாக இருப்பாரா? ராணா பற்றிய மர்மங்கள் ஒவ்வொன்றாக வெளிவர உள்ளது. இதனால் இனி வரும் எபிசோடுகளில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் இருக்க வாய்ப்பு உள்ளது.