Thangamayil Speaks Lie about Her Age : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் எதையும் யோசிக்காமல் தங்கமயில் 2010ல் 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாக கூறி சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் சரவணன் மற்றும் தங்கமயில் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதாவது, தன்னை விட தங்கமயில் வயதில் மூத்தவர் என்ற உண்மையை சரவணன் கண்டுபிடிப்பதும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் தான் இந்த வாரம் முழுவதும் ஒரு டாஸ்க்காக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
25
பொய் சொல்லி மாட்டிக்கிட்ட தங்கமயில்
பொதுவாக தீபாவளி முடிந்து 20 நாட்கள் கடந்த நிலையில் பாண்டியன் சீரியலில் இப்போது தான் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் கலைகட்டத் தொடங்கியுள்ளது. இதில் அனைவரும் குடும்பமாக தீபாவளியை கொண்டாடுகின்றனரா இல்லையா என்பது பற்றி பார்க்கலாம். பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் அனைவரும் ஒன்றாக அரட்டை அடித்துக் கொண்டு எல்லா வேலைகளும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
35
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தீபாவளி கொண்டாட்டம்
கோமதி, மீனா, ராஜீ, தங்கமயில் என்று அனைவரும் கிச்சனில் தீபாவளிக்கு பலகாரம் செய்து கொண்டிருப்பதோடு, மறுநாள் அசைவ உணவிற்கு இப்போதே தயார் செய்து வைக்கிறார்கள். அப்போது தங்கமயில் தன்னுடைய வயது பற்றி பேசுகிறார். அதாவது, தீபாவளிக்கு மைனா படத்திற்கு சென்றது குறித்து பேசினார். அதில், 2010ல் 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாக பேச, பின்னர் அனைவரும் உஷாராகி 30 வயதா என்று கேட்க இல்ல இல்ல நான் 2005ல் 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் என்று பேச்சை மலுப்பினார்.
45
தீபாவளி கொண்டாட்டம்
இதில் உஷாரான சரணவன் பொய் சொன்னால் தான் தங்கமயில் பதற்றமாக இருப்பாள். இப்போது ஏன் இப்படி இருக்கிறாள் என்று யோசித்துக் கொண்டிருந்தாள். இதற்கிடையில் சரவணனுக்கு கூட இன்னும் 30 வயதாகவில்லை. அப்படியிருக்கும் போது நீ சரவணனை விட மூத்தவளா என்ற கோணத்தில் பேச்சு செல்ல தங்கமயில் பேச்சை மலுப்பி தனக்கு இன்னும் 30 வயது கூட ஆகவில்லை என்று மலுப்பினார்.
55
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
பின்னர் அனைவரும் தூங்க சென்ற பிறகு காலை 4 மணிக்கு எழுந்தனர். இதில் மீனா மட்டும் தாமதமாக எழுந்தார். பின்னர் பூஜை போடப்பட்டது. இதைத் தொடர்ந்து முதலாவதாக பழனிவேல் மற்றும் சுகன்யாவிற்கு புதிய ஆடை கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் சரவணன் மற்றும் தங்கமயிலுக்கு புதிய உடை, செந்தில் மற்றும் மீனாவிற்கு புதிய ஆடை, கதிர் மற்றும் ராஜீ கடைசியாக அரசிக்கு புதிய ஆடை கொடுக்கப்பட்டது. அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடு முடிந்தது.