
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனின் அறையில் இருந்து சக்தி எடுத்த பழைய லெட்டர் ஒன்றில், தேவகி என்கிற பெண், அவருக்கு சாபம் விட்டு எழுதி இருந்தார். அந்த தேவகி யார் என்பதை கண்டுபிடிக்க தற்போது சக்தி, இராமேஸ்வரத்தில் முகாமிட்டுள்ளார். அந்த தகவல் தெரிந்த ஆதி குணசேகரன், சக்தியை தீர்த்துக் கட்ட தன்னுடைய ஆட்களுக்கு உத்தரவிடுகிறார். இதையடுத்து சக்தி, தனுஷ்கோடிக்கு செல்லும் வழியில், அவரை கொல்ல, ஆதி குணசேகரனின் ஆட்கள் சுத்துப் போட்டுவிடுகிறார்கள். டவர் கிடைக்காததால், சக்திக்கு என்ன ஆச்சு என தெரியாமல் ஜனனியும் பதறிப்போய் இருந்தார். இந்த நிலையில், இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
சக்தியை ஆதி குணசேகரன் அனுப்பிய ஆள் ஒருவர் குத்திக் கொல்ல வந்தபோது, துப்பாக்கி உடன் வந்த இருவர், அந்த நபரை சுட்டுக் கொன்றுவிடுகிறார்கள். இதைப்பார்த்து ஷாக் ஆன ஆதி குணசேகரன் ஆட்கள் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள். பின்னர் அந்த அடையாளம் தெரியாத நபர் அங்கிருந்து காரில் ஏறிச் சென்றுவிடுகிறார். அவர் யார் என்று தெரியாமல் குழம்பி இருக்கும் சக்தி, தேவகி யார் என்பதை தெரிந்துகொள்ள தனுஷ்கோடி நோக்கி பயணிக்கிறார். அப்போது அங்கு இருக்கும் கண்ணதாசன் என்பவரை சந்தித்து பேசுகிறார். அந்த கண்ணதாசன் சக்தியை தனியே அழைத்து சென்று பல உண்மைகளை சொல்கிறார்.
கண்ணதாசன் உடன் பேச செல்லும் போது சக்திக்கு ஜனனியிடம் இருந்து போன் வருகிறது. அதை கட் செய்வதற்கு பதிலாக அட்டன்பண்ணி தன் பையில் வைக்கிறார். அப்போது அங்கு நடப்பவற்றை ஜனனி, ரேணுகா, நந்தினி ஆகியோரும் போன் வாயிலாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தேவகி நேபாளை சேர்ந்தவர் என்றும், அவர் தன் பெற்றோர் உடன் இராமேஸ்வரம் வந்திருந்தபோது அவரது தாய் சுனாமியால் பலியாகிவிட்டாராம். அதன்பின்னர் நாம் இராமேஸ்வரத்திலேயே செட்டில் ஆகிவிடலாம் என தேவகியும் அவர் தந்தையும் முடிவெடுத்து, நேபாளில் உள்ள சொத்துக்களையெல்லாம் விற்றுவிட்டு, இராமேஸ்வரத்திற்கு வந்து இங்கு பல சொத்துக்களை வாங்கி இருக்கிறார்கள்.
இராமேஸ்வரத்தில் செட்டிலான தேவகியின் குடும்பத்துக்கு குணசேகரனின் தந்தை ஆதி முத்து சில உதவிகளை செய்திருக்கிறார். அதனால் தேவகியின் தந்தைக்கு ஆதி முத்துவை பிடித்துவிடுகிறது. நல்ல உழைப்பாளியாக இருப்பதால் தன்னுடைய பெண்ணை ஆதி முத்துவுக்கே கல்யாணம் பண்ணி கொடுக்கலாம் என முடிவெடுக்கிறார். ஆதி முத்துவிடம் உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா என தேவகியின் அப்பா கேட்கையில், தனக்கு கல்யாணம் ஆகவில்லை என பொய் சொல்லிவிடுகிறார் ஆதி முத்து. தேவகியை கல்யாணம் செய்தால், அவரின் சொத்துக்களையெல்லாம் அடைந்துவிடலாம் என்கிற பேராசையில் இந்த பொய் சொல்லி இருக்கிறார்.
இதையடுத்து தேவகியையும் திருமணம் செய்து வாழ்ந்து வந்திருக்கிறார் ஆதி முத்து. அவர் தேவகியை திருமணம் செய்த விஷயம் தென்காசியில் இருந்த அவரின் குடும்பத்தினருக்கு தெரியாது. பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சாகக் கிடந்த ஆதி முத்து, தேவகி பற்றிய ரகசியங்களை தன் மூத்த மகன் ஆதி குணசேகரனிடம் சொல்லி இருக்கிறார். இதையடுத்து இராமேஸ்வரம் வந்த ஆதி குணசேகரன் தேவகியை சந்தித்து, ஆதி முத்து இறந்த விஷயத்தையும், அவருக்கு ஏற்கனவே குடும்பம் இருக்கும் விஷயத்தையும் சொல்வதோடு, நீ இந்த ஊரைவிட்டே ஓடிரு என மிரட்டுகிறார்.
அப்போது ஆதி முத்து, தன்னிடம் இருக்கும் சொத்துக்கள் அனைத்தையும் எழுதி வாங்கிவிட்டு தன்னை திருமணம் செய்துகொண்ட விஷயத்தை சொல்கிறார் தேவகி, அதுமட்டுமின்றி தனக்கு ஒரு மகன் இருப்பதையும் சொல்கிறார். தேவகியிடம், பேசும்போது எனக்கு இரண்டு தம்பிகள் இருக்காங்க என்று ஆதி குணசேகரன் சொல்வதை பார்க்கும் போது, தேவகியின் மகன் தான் சக்தி என்கிற சீக்ரெட்டையும் சூசகமாக உடைத்திருக்கிறார்கள். இப்படி அடுத்தடுத்த உண்மைகள் வெளி வருவதால், அந்த தேவகி என்ன ஆனார் என்பதை இனி வரும் எபிசோடுகளில் தெரிந்துகொள்ளலாம்.