மகன்களுடன் ராக் வித் ராஜாவை ரசித்த தனுஷ்..வைரலாகும் போட்டோ..

Kanmani P   | Asianet News
Published : Mar 19, 2022, 11:19 AM IST

மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் இளையராஜாவின் 'ராக் வித் ராஜா' இசைக் கச்சேரியில் நடிகர் தனுஷ் விஷயம் செய்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

PREV
18
மகன்களுடன் ராக் வித் ராஜாவை ரசித்த தனுஷ்..வைரலாகும் போட்டோ..
dhanush family

பெரிய இடத்து மாப்பிளை :

நடிகர் தனுஷ் பிரபல தயாரிப்பளார் கஸ்தூரி ராஜாவின் மகன் தனுஷ் என்றாலும். ரஜினியின் மருமகன் என்பதே அவருக்கு தனி அந்தஸ்த்தை கொடுத்தது.ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செயது கொண்ட தனுஷின் புகழ் தற்போது உச்சத்தில் உள்ளது.
 

28
dhanush family

தனக்கென தனிப்பாதை :

ரஜினியின் மருமகன் என்கிற அந்தஸ்து இருந்தாலும் தனக்கென தனி பாதையை வகுத்து கொண்டவர் தனுஷ். தமிழில் மட்டுமல்லாமல் பிறமொழிகள், பாலிவுட் என் சுற்றி வந்த தனுஷ் புகழ் தற்போது ஹாலிவுட் வரை பரவி கிடக்கிறது. சமீபத்தில் தான் க்ரே மேன் என்கிற ஆங்கில படத்தில் முன்னணி நாயகனாக நடித்துள்ளார்.

38
dhanush family

மனைவியின் இயக்கத்தில் தனுஷ் :

தனுஷின் மனைவி ஐஸ்வர்யா வாழ்க்கையில் மட்டுமல்ல கேரியரில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர். ஐஸ்வர்யா தனுஷை நாயகனாக வைத்து 3 படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தின் மூலம் தான் சிவகார்த்திகேயன் திரைத்துறைக்கு என்ட்ரி கொடுத்தார். 

48
dhanush family

இரு பிள்ளைகள் :

காதலித்து திருமணம் செய்து கொண்ட தனுஷ் -ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு  இரு ஆண் பிள்ளைகளை உள்ளனர்.  யாத்ரா மற்றும் லிங்கா. அவ்வப்போது தனுஷ் மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து சிலாகித்துக்கொள்வர்.

மேலும் செய்திகளுக்கு... Thiruchitrambalam movie : தனுஷை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லுமா திருச்சிற்றம்பலம்? - லீக்கானது ரிலீஸ் தேதி

58
dhanush family

18 வருட திருமண முறிவு :

இருவரும் தம்பதிகளாகி 18 ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கிரே மேன் படப்பிடிப்பிற்காக தனுஷ் வெளிநாடு பரந்த போது கூட தனது மனைவியை உடன் அழைத்து சென்றிருந்தார். அந்த புகைப்படங்கள் வைரலாகி இருந்தன. இவ்வாறு இருக்க இருவரின் பிரிவு முடிவு அதிர்சியளிப்பதாக இருக்கிறது.

68
dhanush family

விவாகரத்து அறிவிப்பு :

திருமண பந்த முறிவு குறித்து தனுஷ் - ஐஸ்வர்யா சமூக ஊடகங்கள் வழியாக அறிவித்தனர். இந்த செய்தி அவர்களது குடும்பத்தில் மட்டுமல்லாது ரசிகர்ளையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்த மனம் உளைச்சலில் ரஜினி உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் செய்திகளுக்கு...Dhanush : பிரிவுக்கு பின் முதன்முறையாக பேசிக்கொண்ட தனுஷ் - ஐஸ்வர்யா! வைரலாகும் டுவிட்டர் உரையாடல்

78
dhanush family

 விவகாரத்தில் உறுதியில்லை :

பிரிவது குறித்து அறிவிப்பு வெளியாகி இருந்தாலும். இந்த தம்பதிகளுக்கு ஒருவரை விட்டு ஒருவர் பிரிவதில் மனமில்லை என்றே தோன்றுகிறது. அதற்கேற்றார் போல மாறன் படத்தில் தனுஷ் படியிருந்த பாடல் முழுவதும் ஐஸ்வர்யா நினைவுகள் கொட்டி கிடந்தது. அதேபோல சமூக ஊடகங்களில் இருந்து தனுஷ் பெயரை நீக்காமல் இருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ்.
 

88
dhanush family

மகன்களுடன் இசைக்கசேரியில் தனுஷ் :

இவர்கள் பிரிவு மாதுளை மேல் பூனையாக இருக்கும் நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற ராக் வித் ராஜா இசைக்கசேரிக்கு தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கவுடன் வந்த ரசித்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.
 

Read more Photos on
click me!

Recommended Stories