ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் ப்ரீமியர் காட்சிகள் வெளிநாட்டில் இன்று அதிகாலை 4 மணிக்கே போடப்பட்டன. இதையடுத்து இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கூலி திரைப்படத்தின் முதல் காட்சி காலை 6 மணிக்கு திரையிடப்பட்டது. இறுதியாக தமிழ்நாட்டில் இன்று காலை 9 மணியளவில் கூலி படம் ரிலீஸ் ஆனது. இப்படத்தைக் காண அதிகாலையிலேயே தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள், அங்குள்ள ரஜினியின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
23
கூலி படம் பார்த்த தனுஷ்
ரஜினிகாந்துக்கு திரையுலகில் மட்டுமின்றி சினிமாவிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ரஜினியை பார்த்து நடிக்க வந்த நடிகர்கள் ஏராளம். அதில் ஒருவர் தான் தனுஷ். இவர் ரஜினியின் மிகத் தீவிரமான ரசிகர். தன் படங்களின் பர்ஸ்ட் ஷோவை கூட மிஸ் செய்திருக்கிறார் தனுஷ். ஆனால் ரஜினி படத்தின் பர்ஸ்ட் ஷோக்களை மிஸ் பண்ணாமல் பார்த்து விடுவார். அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று ரிலீஸ் ஆகி உள்ள கூலி திரைப்படத்தின் முதல் காட்சியை சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் கண்டு ரசித்துள்ளார் தனுஷ்.
33
ரஜினி ஃபேமிலியோடு படம் பார்த்த தனுஷ்
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். திருமணமாகி 18 ஆண்டுகளுக்கு பின்னர் தனுஷும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். ரஜினி மகளை விவாகரத்து செய்தாலும் ரஜினி மீதான அன்பு தனுஷுக்கு குறையவில்லை. அந்த வகையில் இன்று ரோகினி தியேட்டரில் ரஜினி ஃபேமிலியோடு கூலி படம் பார்த்திருக்கிறார் தனுஷ். அதே திரையிரங்கில் ரஜினியின் மனைவி லதாவும் அப்படத்தை பார்த்துள்ளார். அதேபோல் தனுஷின் மகன் லிங்காவும் அந்த திரையரங்கில் தான் கூலி படம் பார்த்துள்ளார்.