The Gray Man : யம்மாடியோ.. இத்தனை கோடியா..! தனுஷின் ஹாலிவுட் பட பட்ஜெட்டை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்

First Published | May 25, 2022, 12:06 PM IST

The Gray Man : கோலிவுட்டில் பிசியாக இருக்கும் தனுஷ் கைவசம் தி கிரே மேன் என்கிற ஹாலிவுட் படமும் உள்ளது. அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் இயக்கி உள்ளனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், தற்போது தமிழில் திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் திருச்சிற்றம்பலம் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கி உள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூலை 1-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

அதேபோல் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பும் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தனுஷின் சகோதரர் செல்வராகவன் இயக்கி உள்ளார். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார். 

Tap to resize

மேற்கண்ட இரண்டு படங்களும் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், தற்போது வாத்தி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்.

இவ்வாறு கோலிவுட்டில் பிசியாக இருக்கும் தனுஷ் கைவசம் தி கிரே மேன் என்கிற ஹாலிவுட் படமும் உள்ளது. அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் இயக்கி உள்ளனர். இப்படம் வருகிற ஜூலை 22-ந் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் ரூ.1500 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. 

இதையும் படியுங்கள்... VJ Chitra :ஹேம்நாத்தை யூஸ் பண்ணிட்டு கழட்டிவிட்ருனு சொன்னேன், அவ கேட்கல- சித்ராவின் தோழி வெளியிட்ட பகீர் தகவல்

Latest Videos

click me!