சிவகார்த்திகேயனின் அசுர வளர்ச்சி பிடிக்காமல் அவருக்கு பலர் குடைச்சல் கொடுத்ததாக பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் பகீர் தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : சினிமாவில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அபாரமானது. குறுகிய காலத்திலேயே அவர் முன்னணி நடிகராக உயர்ந்ததால், அவரது வளர்ச்சில் சிலருக்கு பிடிக்காமல் போனது. பல வழிகளில் அவருக்கு பிரச்சனை கொடுத்தனர்.
கிட்டத்தட்ட பாலிவுட்டில் சுஷாந்த் சிங்கிற்கு நடந்த கொடுமையை போலவே, இங்கு சிவாவுக்கு நடந்தது. அவர் படித்தவர், விவரமானவர் என்பதால் அதனை நன்றாக கையாண்டார். சிவகார்த்திகேயனுக்கு நடந்ததைப் போல் வேறு எந்த நடிகரும் அத்தகையை கொடுமைகளை சந்தித்ததில்லை” என தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... Atlee : விஜய்க்காக மீண்டும் பிகில் கதையை கையிலெடுக்கும் அட்லீ... அவரே சொன்ன வெறித்தனமான அப்டேட்