OM movie : தீபாவளி, ஆயுத பூஜை ரேஸில் இருந்து விலகிய தனுஷின் ஓம்... லீக்கான புது ரிலீஸ் தேதி

Published : Sep 24, 2026, 04:20 PM IST

Dhanush Postpones Om Chapter 1 Release : ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஓம் படம் அக்டோபர் மாதம் 16ந் தேதி ரிலீஸ் ஆகாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
14
ஓம் பட ரிலீஸ் தேதி மாற்றம்

ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' மற்றும் சூர்யா நடிக்கும் 'சீன்' ஆகிய படங்களுடன் பாக்ஸ் ஆபிஸில் மோதுவதை தவிர்க்க, நடிகர் தனுஷ் தனது 'ஓம்: சாப்டர் 1' படத்தின் ரிலீஸை தள்ளிவைத்துள்ளார். சீனியர் நடிகர்கள் மீதான மரியாதையால் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், புதிய ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேசிய விருது வென்ற நடிகர் தனுஷ், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் சூர்யாவின் படங்களுடன் தனது படம் மோதுவதை தவிர்க்கவே இந்த முடிவை எடுத்துள்ளார். அக்டோபர் 16-ம் தேதி 'ஓம்: சாப்டர் 1' தியேட்டர்களில் வெளியாகவிருந்தது. ஆனால், ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது குறித்து தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் ஒரு நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.

Dhanush : இயக்குநர் தனுஷுக்கு கிடைத்த முதல் தேசிய விருது... டபுள் சந்தோஷத்தில் ரசிகர்கள்

24
ரஜினி மீதான மரியாதையால் ரிலீஸ் தள்ளிவைப்பு

முதலில் திட்டமிட்டபடி நடந்திருந்தால், ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' படத்துடன் தனுஷ் படம் மோதியிருக்கும். நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர் 2' படத்தில் வித்யா பாலனும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார். இந்தப் படம் அக்டோபர் 15-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

"இந்த மாதிரி நேரத்தில் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றுவது பெரிய சவால். நாம் பல வருஷங்களாக கொண்டாடும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சாரோட படம் அக்டோபர் 15-ம் தேதி வருது. அதாவது நம்ம படம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு நாள் முன்னாடி. அவர் மேல இருக்குற மிகப்பெரிய மரியாதையால நம்ம 'ஓம்' படத்தின் ரிலீஸை தள்ளிவைக்க முடிவு பண்ணிருக்கோம்," என தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.

34
சூர்யாவின் 'சீன்' படத்துடனான தீபாவளி கிளாஷையும் தவிர்த்த தனுஷ்

இதுமட்டுமில்லாமல், சூர்யாவின் அடுத்த படமான 'சீன்' படத்துடனும் பாக்ஸ் ஆபிஸில் மோதுவதை தவிர்க்க, தீபாவளி பண்டிகை நேரத்திலும் 'ஓம்' படத்தை ரிலீஸ் செய்யப்போவதில்லை என தனுஷ் அறிவித்துள்ளார். "அதேபோல, இந்த வருஷம் தீபாவளிக்கும் நாங்க வரல. ஏன்னா அதே தேதியில சூர்யா சாரோட படம் ரிலீஸ் ஆகுதுன்னு முன்னாடியே அறிவிச்சிட்டாங்க.

நியாயமா பார்த்தா, அவங்க தான் முதல்ல தேதியை அறிவிச்சாங்க. பெரிய படங்கள் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கணும், மத்தவங்களோட முடிவை மதிக்கணும்னு நாங்க உறுதியா நம்புறோம். சினிமா மற்றும் திரையுலகத்தின் நன்மைக்காகவே இந்த முடிவை எடுத்திருக்கோம். எங்களோட புதிய ரிலீஸ் தேதியை சீக்கிரமே அறிவிப்போம்," என்று தனுஷ் கூறியுள்ளார்.

44
புது ரிலீஸ் தேதி என்ன?

தனுஷின் 'ஓம்' படத்தைப் பொறுத்தவரை, ராஜ்குமார் பெரியசாமி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மம்மூட்டியும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அமரன் படத்திற்காக தேசிய விருது வென்ற ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய படம் இது என்பதால் இதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படம் நவம்பர் மாத இறுதியில் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் திரையரங்கில் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏன் நாங்க விஷ் பண்ணக் கூடாதா? தனுஷின் ஒரே ஒரு பதிவு: வெடித்துக் கிளம்பிய அரசியல் பூகம்பம்?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories