நடிகர் தனுஷ், முதன்முறையாக தெலுங்கில் நடித்த திரைப்படம் சார். வெங்கி அட்லூரி இயக்கிய இப்படம் தமிழில் வாத்தி என்கிற பெயரில் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் தனுஷுடன் சம்யுக்தா, சமுத்திரக்கனி, கென் கருணாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆனது. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்திருந்தனர்.