கல்லீரல் பிரச்சனையால் அவதிப்படும் நடிகர் அபிநய்யின் மருத்துவ செலவுக்காக நடிகர் தனுஷ் உதவிக்கரம் நீட்டி இருக்கிறார். அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.
தனுஷ் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் துள்ளுவதோ இளமை. கஸ்தூரி ராஜா இயக்கிய இப்படத்தில் நடிகர் தனுஷ் பள்ளி மாணவனாக நடித்திருந்தார். அப்படத்தில் இவரது நண்பராக நடித்தவர் தான் அபிநய். ஆள் பார்ப்பதற்கு மிகவும் ஸ்மார்ட் ஆக இருப்பார். இதனால் துள்ளுவதோ இளமை படத்திற்கு பின்னர் அபிநய் தமிழ் மட்டுமின்றி பிற மொழிப் படங்களிலும் பிசியாக நடித்து வந்தார். குறிப்பாக மலையாளத்தில் தற்போது நடிப்பு அசுரனாக இருக்கும் பஹத் பாசிலின் முதல் படத்திலும் அபிநய் நடித்திருந்தார்.
24
அபிநய்க்கு உதவிய பிரபலங்கள்
இந்த நிலையில், அபிநய்க்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு, அதற்காக அறுவை சிகிச்சை செய்யக் கூட பணமின்றி தவித்து வந்தார். அபிநய்யின் இந்த நிலை அறிந்த கேபிஒய் பாலா, அண்மையில் நடிகர் அபிநய்யின் வீட்டிற்கே சர்ப்ரைஸாக சென்று, அவரிடம் நலம் விசாரித்துவிட்டு, அவரின் மருத்துவ செலவுக்காக ரூ.1 லட்சம் பண உதவி செய்திருந்தார். அவர் செய்த இந்த எதிர்பாரா உதவியால் எமோஷனல் ஆன அபிநய், கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் அவர் விரைவில் நலம்பெற வாழ்த்தி இருந்தார் பாலா.
34
அபிநய்க்கு உதவிக்கரம் நீட்டிய தனுஷ்
பாலா செய்த இந்த உதவியை அடுத்து, நடிகர் தனுஷை பலரும் சாடினர். ஏனெனில் முன்பின் பழக்கமில்லாத பாலாவே ஒரு லட்சம் ரூபாய் உதவி செய்யும்போது, உடன் நடித்த தனுஷ் எந்தவித உதவியும் செய்யாமல் அமைதியாக இருப்பது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். சினிமாவில் கோடி கோடியாய் சம்பளம் வாங்கிவிட்டு, சக நடிகருக்கு உதவ மனமில்லையா என பலரும் கேட்டு வந்தனர். இந்த நிலையில், நடிகர் தனுஷும் தற்போது அபிநய்க்கு உதவிக்கரம் நீட்டி இருக்கிறார்.
அதன்படி அபிநய்யின் மருத்துவ செலவுக்காக நடிகர் தனுஷ் ரூ.5 லட்சம் கொடுத்து உதவி இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள், தனுஷ் லேட்டாக உதவினாலும் வெயிட்டாக கொடுத்திருக்கிறார் என பாராட்டி வருகின்றனர். அபிநய்க்கு இதுவரை யாரும் கொடுக்காத அளவு, மிகப்பெரிய தொகையை கொடுத்து உதவி இருக்கும் நடிகர் தனுஷுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. அபிநய்யின் அறுவை சிகிச்சைக்கு இந்த தொகை பெரிதும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.