இது ஒருபுறம் இருக்க, தனுஷ் படம் பார்த்த... ரோகிணி திரையரங்கில், தனுஷின் ரசிகர்கள் கொண்டாட்டம் என்கிற பெயரில், திரையரங்கில் படம் பார்க்கும் திரையை தாறுமாறாக கிழித்துள்ளனர். இதனால் திரையரங்கு உரிமையாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் இப்படி செய்ததால், அடுத்த காட்சியை குறித்த நேரத்தில் திரையிடுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. ரசிகர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என நடிகர்கள் கூறிவரும் நிலையிலும், முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாகும் போது, ரசிகர்கள் அத்து மீறி அட்ராசிட்டியில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது.