'இட்லி கடை' கன்ஃபாம் செய்த தனுஷ்..!

Published : Sep 19, 2024, 06:03 PM IST

நடிகர் தனுஷ் நடிக்கும் 52 ஆவது படத்தின் டைட்டில் 'இட்லி' கடை என்பதை படக்குழு தற்போது புதிய போஸ்டருடன் உறுதி செய்துள்ளது.  

PREV
14
'இட்லி கடை' கன்ஃபாம் செய்த தனுஷ்..!
Dhanush Raayan:

நடிகர் தனுஷ் தன்னுடைய 50-வது படமான ராயன் படத்தை, அவரே இயக்கி, நடித்திருந்த நிலையில்... இப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இயக்குனர் சேகர் காமுலா இயக்கத்தில்,  தனுஷ் நடித்து முடித்துள்ள 'குபேரா' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளில் தனுஷ் நடித்துள்ள இந்த படத்தில், ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் நாகார்ஜுனா,  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள நடிகர் தனுஷ், அடுத்ததாக நடிக்க உள்ள 52 வது படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 

24
Dhanush D52 Update:

ஏற்கனவே தனுஷின், 52 வது படத்தை Dawn பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அறிக்கை வெளியிட்டு உறுதி செய்த நிலையில், தற்போது இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அது என் பர்சனல்! நேர்காணலில் மைக்கை தூக்கி போட்டுவிட்டு வெளியேறிய நடிகர் தனுஷ்!
 

34
Dhanush Direct D52 Movie

அதன்படி இந்த படத்திற்கு 'இட்லி கடை' என பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை Dawn பிக்சர்ஸ் மற்றும் தனுஷின் வுன்டர்பார்  ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்த படத்தை நடிகர் தனுஷ் தான் இயக்கி - நடிக்க உள்ளார். ஏற்கனவே இவர் இயக்கத்தில் வெளியான பா.பாண்டி, ராயன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அடுத்ததாக நிலவுக்கு என் மேல் என்னடி கோவம் படமும் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இதை தொடர்ந்து தனுஷ் தன்னுடைய நான்காவது படமாக இந்த படத்தை இயக்குகிறார்.
 

44
D52 Movie Title is Idly Kadai

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், இந்த படத்தில் தனுஷுக்கு வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளதாகவும், ஹீரோயினாக தேசிய விருது நடிகை நித்தியா மேனன் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே போல் இதுவரை தனுஷ் இயக்கிய படங்களை விட, இப்படம் அதிக அளவிலான பட்ஜெட்டில் எடுக்கப்பட உள்ளதாகவும்... சுமார் 120 கோடி இந்த படத்தின் பட்ஜெட் என கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிதியிடம் கோடிக்கணக்கில் வரதட்சணை வாங்கினாரா சித்தார்த்? பயில்வான் கூறிய பகீர் தகவல்!

Read more Photos on
click me!

Recommended Stories