Dhanush Crying in Idli Kadai Pre Release Event : தனுஷ் இயக்கி நடித்து இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாக இருக்கும் இட்லி கடை படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் மாஸ்டர் தீகனின் அம்மா பேசியதைக் கேட்டு தனுஷ் கண்கலங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். கடைசியாக குபேரா படம் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டது. வசூலிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இப்போது இட்லி கடை படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி அடுத்தடுத்த விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு வெளியாக இருக்கிறது.
இட்லி கடை படத்தை அவரே இயக்கி, நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலமாக இந்தப் படத்தை அவர் தயாரிக்கவும் செய்துள்ளார். இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ஆர் பார்த்திபன், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி, ராஜ்கிரண், வடிவுக்கரசி, பிரிகிடா என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு தனுஷ் மற்றும் நித்யா மேனன் இந்தப் படத்தில் நடித்துள்ளானர். மேலும், திருச்சிற்றம்பலம் படமான நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. இதே போன்று, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது. இப்போது இந்த முறையும் தனுஷ் மற்றும் நித்யா மேனன் காம்பினேஷனில் உருவாகியிருக்கும் இட்லி கடை படமான சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுக் கொடுக்கும் என்று தெரிகிறது. அந்தளவிற்கு இந்தப் படத்தில் நித்யா மேனன் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் தான் மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் என்று பல ஊர்களில் நடைபெற்ற இட்லி கடை படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டு பேசினார். அதில், தனது திருடா திருடி, காதல் கொண்டே போன்ற படங்களின் படப்பிடிப்பு காட்சிகள் பற்றி நினைவு கூர்ந்தார். மேலும், சினிமா துறையில் வந்த அனுபவம் பற்றியும் அவர் பேசினார். இந்த நிலையில் தான் இட்லி கடை படத்தில் தனுஷின் சிறு வயது கதாபாத்திரத்தில் மாஸ்டர் தீகன் நடித்துள்ளார். இந்த சூழலில் அவரது அம்மாவும் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனுஷைப் பற்றி பேசினார்.
56
கண்கலங்கிய தனுஷ்
அதில், அவர் கூறியதைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட தனுஷ் கண்கலங்கி அழுதுள்ளார். அவர் என்ன பேசினார் என்றால், நான் வழிபட்ட ஈசனும் முருகனும் தான் என்னுடைய மகனுக்கு இந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறார்கள். இவ்வளவு ஏன், இந்தப் படத்தில் என்னுடைய மகனின் பெயர் முருகன். இதைவிட வேறென்ன வேண்டும். என்னுடைய மகனுக்கு இந்த இட்லிக் கடை படம் திருப்பு முனையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நாங்கள், எங்கையோ ஒரு ஓரத்தில் மூலையில் இருந்தோம். எங்களை தேடி கண்டுபிடித்து தனுஷ் சார் இந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறார். அவருக்கு என்னுடைய நன்றி.
66
மாஸ்டர் தீகன் அம்மா பேச்சு
என்னுடைய மகனிடம் நீ எவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்தாலும் தனுஷ் சாருக்கு உண்மையான விஸ்வாசமாக இருக்க வேண்டும் என்று சொல்லி சொல்லி தான் வளர்த்து வருகிறேன். மேலும், நான் கர்ப்பமாக இருக்கும் போது உங்கள நினைச்சு தான் பெத்தேன். அதனால தான் தன் மகன் பார்பதற்கு உங்களை போல் இருக்கிறார் என்றும், நானும் என் குழந்தையும் என் உயிருள்ளவரை உங்களை நினைத்து கொண்டும், விசுவாசமாக இருப்போம் என்றும் கூறியுள்ளார். இதைக் கேட்டு தனுஷ் கண்கலங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.