முதன்முறையாக தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா - அதுவும் இவர் டைரக்‌ஷன்லயா?

Published : Jul 26, 2023, 11:34 AM IST

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ், அடுத்தபடத்தில் ராஷ்மிகா மந்தனா உடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளாராம்.

PREV
14
முதன்முறையாக தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா - அதுவும் இவர் டைரக்‌ஷன்லயா?
Dhanush

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி உள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இப்படம் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் வருகிற ஜூலை 28-ந் தேதி நடிகர் தனுஷின் பிறந்தநாளன்று ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

24

கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து தற்போது தனது 50-வது படத்தில் நடித்து வருகிறார் தனுஷ், சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை தனுஷே இயக்குகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷான், விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... ஆபரேஷன் செய்து தான் அழகானேனா... இம்புட்டு கவர்ச்சிக்கு காரணம் என்ன? பியூட்டி சீக்ரெட்டை வெளியிட்ட ஹனி ரோஸ்

34
Dhanush

அதேபோல் இந்தியிலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார் தனுஷ். இவரை ராஞ்சனா படம் மூலம் இந்தியில் அறிமுகப்படுத்திய ஆனந்த் எல் ராய் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்க உள்ளார். அப்படத்தில் தான் தனுஷ் நாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

44
dhanush, rashmika

இதுதவிர தெலுங்கிலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் தனுஷ். இப்படத்தை சேகர் காம்முலா இயக்க உள்ளார். இப்படம் குறித்த அப்டேட் தான் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளாராம். இதன்மூலம் இருவரும் முதன்முறையாக கூட்டணி அமைக்க உள்ளனர். மேலும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவும் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளாராம். இப்படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... உலகின் 5-வது பெரிய வைரமா... யார் சொன்னது? டம்மி பாவா அது! உண்மையை போட்டுடைத்த தமன்னா

Read more Photos on
click me!

Recommended Stories