Irfan : ட்ரோலில் சிக்கினாலும் லட்சக்கணக்கில் சேல்ஸ் ஆன பிரியாணி... அடேங்கப்பா யூடியூபர் இர்பானுக்கு இம்புட்டு லாபமா?

Published : Jun 10, 2026, 02:17 PM IST

Youtuber Irfan Briyani : யூடியூபர் இர்பான் அண்மையில் பக்ரீத் பண்டிகைக்கு பிரியாணி விற்பனை செய்து சர்ச்சையில் சிக்கி இருந்தார். அதன் மூலம் அவருக்கு எவ்வளவு வருமானம் வந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
15
YouTuber Irfan Biryani Profit

தமிழ்நாட்டில் சர்ச்சைக்குரிய யூடியூபராக வலம் வருபவர் இர்பான். உணவு ரிவ்யூ செய்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு அதன் மூலம் மில்லியன் கணக்கிலான சப்ஸ்கிரைபர்களை வைத்திருக்கும் இர்பான், அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். அந்த வகையில் லேட்டஸ்டாக பிரியாணி விற்பனை செய்து அதன்மூலம் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அண்மையில் முடிந்த பக்ரீத் பண்டிகைக்காக, பிரியாணி விற்பனை செய்தார் இர்பான். அதுபற்றி அவர் அறிவிப்பு வெளியிட்டதில் இருந்தே பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

25
இர்பான் பிரியாணி

ஏனெனில், அந்த பிரியாணிக்கு அவர் நிர்ணயம் செய்திருந்த விலை தான் கடும் விமர்சனத்துக்குள்ளானது. 6 பேர் சாப்பிடும் அளவில் 1 கிலோ அரிசி, 1.5 கிலோ மட்டன் போட்டு சமைத்து கொடுப்பேன் என கூறி இருந்த இர்பான். அந்த பிரியாணிக்கு 3 ஆயிரத்து 650 ரூபாய் நிர்ணயம் செய்திருந்தார். வழக்கமாக வெளியே சில முன்னணி ரெஸ்டாரண்ட்களில் கூட இந்த அளவுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டதில்லை. அதிகபட்சம் 3 ஆயிரத்திற்குள் தான் விலை இருக்கும். ஆனால் இர்ஃபான் 3 ஆயிரத்து 650 ரூபாய் விலை நிர்ணயம் செய்தது விமர்சனத்துக்குள்ளானது.

35
வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

அவர் பிரியாணி பற்றிய அறிவிப்பு வெளியிட்டபோதே நெட்டிசன்கள் அவரை கடுமையாக ட்ரோல் செய்ய தொடங்கினார்கள். அதுவே அந்த பிரியாணி விற்பனை செய்யப்பட்ட பின் சும்மா விடுவார்களா என்ன, அதை ரிவ்யூ செய்வதற்காகவே ஏராளமானோர் வாங்கி இருக்கிறார்கள். அதிலும் முன்னணி யூடியூபர் ஒருவர் இர்பான் பிரியாணியை வாங்கி, அதில் உள்ள ப்ளஸ் என்ன, மைனஸ் என்ன என்பதை புட்டு புட்டு வைத்து வீடியோ வெளியிட்டார். அதில் நெகடிவ் விமர்சனங்கள் தான் அதிகம் வந்தன. இதைப்பார்த்த நெட்டிசன்கள் இர்பான் பிரியாணி ஸ்கேம் செய்துவிட்டதாக அவரை வறுத்தெடுத்து வந்தனர்.

45
ட்ரோல்கள் பற்றி இர்பான் சொன்னதென்ன?

இந்த நிலையில், சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட இர்பானிடம் இந்த பிரியாணி விவகாரம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, இதுபற்றி நான் பேச வேண்டாம் என இருந்தேன். ஆனால் நீங்கள் கேட்டதால் சொல்கிறேன். என்னிடம் பிரியாணி வாங்கி சப்பிட்டவர்களில் 90 சதவீதம் பேர் பாசிடிவ் விமர்சனங்கள் தான் கொடுத்திருந்தார்கள். 10 சதவீதம் பேர் மட்டும் நெகடிவ் விமர்சனம் தந்தார்கள். டேஸ்ட் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும், ஒரு சிலருக்கு டேஸ்ட் பிடிக்காமல் போயிருக்கலாம். அவர்களின் விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்கிறேன். இது முதல் பாகம் தான், இனி அடுத்தடுத்து பிரியாணி வரும் என கூறி இருந்தார்.

55
இர்பானுக்கு லாபம் எவ்வளவு?

மேலும் அந்த வீடியோவில் தன்னிடம் பிரியாணி வாங்கியது எத்தனை பேர் என்கிற விவரத்தையும் இர்பான் கூறி இருந்தார். அதன்படி அவரிடம் மொத்தம் 124 பேர் பிரியாணி வாங்கினார்களாம். அதனை கணக்கிட்டு பார்த்தால், சுமார் 4 லட்சத்து 52 ஆயிரத்து 600 ரூபாய்க்கு அவரின் பிரியாணி சேல்ஸ் ஆகி இருக்கிறது. அதிலிருந்து தனக்கு 20 சதவீதம் லாபம் கிடைத்ததாகவும் இர்பான் கூறி இருந்தார். அதன்படி பார்த்தால் 90 ஆயிரத்து 520 ரூபாய் லாபம் கிடைத்திருக்கிறது. பலர் ட்ரோல் செய்தாலும் அவர் பிரியாணி மூலம் இவ்வளவு பெரிய தொகையை ஒரே நாளில் சம்பாதித்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories