வீர தீர சூரன் பட ரிலீசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் வைத்த செக்

விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படத்தின் ரிலீசுக்கு எதிரான வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது.

Delhi Highcourt order in Veera Dheera Sooran Movie case gan

Veera Dheera Sooran Movie Case : விக்ரமின் 62-வது படம் வீர தீர சூரன். அப்படத்தை எஸ்.யு.அருண்குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் விக்ரமுடன் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சூரஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளன. இப்படத்தை ரியா ஷிபு தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படத்தை இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய இருந்தனர். ஆனால் அப்போது அஜித்தின் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆக இருந்ததால் வீர தீர சூரன் ரிலீஸை தள்ளிவைத்தனர்.

Delhi Highcourt order in Veera Dheera Sooran Movie case gan

வீர தீர சூரன் பட வழக்கு

இதையடுத்து அப்படம் மார்ச் 27ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன்களையும் படக்குழு தீவிரமாக மேற்கொண்டு வந்தது. ஆனால் ரிலீசுக்கு ஒரு நாள் முன்னர், அப்படத்தில் முதலீடு செய்த B4U என்ற நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில் படத்தில் தாங்கள் முதலீடு செய்த தொகைக்கு ஈடு செய்யும் விதமாக அப்படத்தின் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமையை தயாரிப்பாளர் B4U நிறுவனத்திற்கு வழங்கி இருந்தாராம்.

இதையும் படியுங்கள்... கடைசி நேரத்தில் வந்த சிக்கல்; வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை!


இடைக்கால தடை

ஆனால் வீர தீர சூரன் படத்தின் ஓடிடி உரிமை விற்பனை செய்யும் முன்னரே படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்ததால், அப்படத்தை B4U நிறுவனத்தால் ஓடிடி தளங்களில் விற்பனை செய்ய முடியவில்லையாம். இதன்காரணமாக தனக்கு 50 சதவீத நிலுவைத் தொகையை செலுத்தாமல் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என வழக்கு தொடர்ந்திருந்தது B4U நிறுவனம். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தது.

டெல்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு

இதன் எதிரொலியாக இன்று வெளிநாடுகளில் இப்படம் வெளியாகவில்லை. அதேபோல் இன்று காலை 9 மணி மற்றும் 10.30 மணி காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில், B4U நிறுவனம் தொடர்ந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது 7 கோடி டெபாசிட் செய்வது மட்டுமின்றி 48 மணி நேரத்திற்குள் அனைத்து ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 7 கோடி தொகையை செலுத்தும் வரை படம் ரிலீஸ் ஆகாது என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Riya Shibu: யார் இந்த ரியா ஷிபு? விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்தை தயாரித்த 19 வயது கல்லூரி மாணவி!

Latest Videos

vuukle one pixel image
click me!