Empuraan Review : அடிபொலியாக உள்ளதா எம்புரான்? முழு விமர்சனம் இதோ
பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ள எம்புரான் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ள எம்புரான் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
Empuraan Movie Review : பிருத்விராஜ் சுகுமாரனின் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியான பான் இந்தியா படம் தான் எம்புரான். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் உருவான இப்படம் மலையாளத்தில் உருவான பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்றாகும். இப்படத்தின் முதல் காட்சி இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வந்த ரசிகர்களை ஏமாற்றாத படமாக இந்த எம்புரான் அமைந்துள்ளது. இதன் விமர்சனத்தை பார்க்கலாம்.
எம்புரான் விமர்சனம்
2019ல் வெளியான லூசிஃபர் படத்தின் தொடர்ச்சியாகவே எம்புரான் நகர்கிறது. அரசியலில் பிமல் நாயர் இல்லாததால் ஜெட்டின் ராம் தாஸின் ஆட்சி நடக்கிறது. முதல்வர் என்ற முறையில் ஐந்து வருடங்களை நிறைவு செய்யும் ஜெட்டின், தந்தையின் பாதையிலிருந்து ஒரு மாற்றத்தை செய்ய தயாராகிறார். சகோதரி பிரியதர்ஷினிக்கு கூட இதில் உடன்பாடில்லை.
ஜெட்டினை வாழ்த்திய பிறகு கேரளாவை விட்டு சென்ற ஸ்டீபன் நெடுபள்ளி திரும்ப வர வேண்டும் என்று அவர்கள் அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால், கேரளாவில் இருந்து மறைந்த ஸ்டீபன் நெடும்பள்ளி, அப்ராம் குரேஷி என்ற நிழலுலக தாதாவாக உலக அளவில் என்ன செய்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.
பிருத்விராஜின் டைரக்ஷன் எப்படி உள்ளது?
இப்படி லூசிஃபரில் பார்த்த அதே பாணியில் கதாபாத்திரங்களின் மிகுதியும், அடுக்குகளும் உள்ள முரளி கோபியின் திரைக்கதைக்கு மேல் பிருத்விராஜ் தனது மேக்கிங் திறமையை காட்டுகிறார். ஏற்கனவே புரமோஷனில் சொன்ன வார்த்தைகள் வெறும் வார்த்தை இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பல காட்சிகளில் படத்தின் பட்ஜெட்டுக்கு நியாயம் சேர்க்கும் 'ரிச்னெஸ்' காண முடிகிறது. குறிப்பாக மோகன்லாலின் இண்ட்ரோ சீன் உட்பட நிறைய பிரம்மாண்ட காட்சிகள் உள்ளன.
இதையும் படியுங்கள்... எம்புரான் படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? ட்விட்டர் விமர்சனம் இதோ
படத்தின் பிளஸ் என்ன?
இரண்டாம் பாதியின் வீரியத்தை கூட்ட ஒரு கள அமைப்பாகவே படத்தின் முதல் பாதி உள்ளது என்று சொல்லலாம். அதே நேரம் கதாபாத்திரங்களை மேலும் அறிமுகப்படுத்தி கதைக்குள் நுழையும் முறையையும் இயக்குனர் எம்புரானிலும் கைவிடவில்லை.
மோகன்லால் ஷோ என்று சொல்லக்கூடிய அதிரடி காட்சிகள் படத்தில் நிறைய உள்ளன. அதில் குறிப்பாக இடைவேளைக்கு பிறகு நெடும்பள்ளி காட்டில் நடக்கும் காட்சி உண்மையிலேயே பிரமாதம். அதே போல் மோகன்லால் தவிர மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் வரும் காட்சியும் திரையரங்கில் பெரிய கைத்தட்டலை பெறுகிறது. வழக்கமான பாணியில் கதாநாயகனின் ஸ்கிரீன் டைமிற்கு அப்பால் கதாநாயகனின் உணர்வை ஒவ்வொரு காட்சியிலும் உருவாக்கி எம்புரான் வெற்றி பெறுகிறான்.
மொத்தத்தில் எம்புரான்...
தொழில்நுட்ப ரீதியாகவும் படம் சிறந்த அனுபவமாக உள்ளது. சுஜித் வாசுதேவனின் ஒளிப்பதிவு, தீபக் தேவின் இசை, மோகன்தாஸின் கலை இயக்கம், அகிலேஷ் மோகனின் எடிட்டிங் எல்லாம் ஒன்றுக்கொன்று சிறப்பாக உள்ளன. மூன்றாம் பாகத்திற்கான ஹிண்ட் கொடுத்து, கூடவே ஒரு சர்ப்ரைஸ் கேமியோவுடனும் படம் முடிகிறது. மொத்தத்தில் இந்த எம்புரான் சரவெடி தான்.
இதையும் படியுங்கள்... வீர தீர சூரன் vs எம்புரான் : வெற்றியை தட்டிதூக்கப்போவது யார்? பிரபல நடிகர் பளீச் பதில்