அக்கட தேசத்து அழகிக்கு அடித்த ஜாக்பாட்; விஜய் மகன் படத்தில் ஹீரோயின் இவங்கதானா?

லைகா நிறுவனம் தயாரிப்பில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்தில் தெலுங்கு நடிகை ஒருவர் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகி உள்ளாராம்.

Vijay Son Jason Sanjay Movie Heroine Faria Abdullah gan

Jason Sanjay Movie Heroine : நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். இவர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கான அறிவிப்பு கடந்த 2023-ம் ஆண்டே வெளியானாலும், படத்திற்கு ஹீரோ கிடைக்காமல் சுமார் ஓராண்டு திண்டாடி வந்தார் ஜேசன் சஞ்சய். இதையடுத்து இப்படத்தின் கதைகேட்டு இம்பிரஸ் ஆன நடிகர் சந்தீப் கிஷான், இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

Vijay Son Jason Sanjay Movie Heroine Faria Abdullah gan

விஜய் மகனின் முதல் படம்

சந்தீப் கிஷான் ஹீரோவாக கமிட்டானதும் படத்தின் வேலைகள் வேகமெடுத்தன. இப்படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோஸில் தான் இப்படத்தின் ஷுட்டிங் நடைபெற்று வருகிறதாம். லைகா நிறுவனம் அஜித், ரஜினி, கமல் என பெரிய ஹீரோக்களை நம்பி தயாரித்த படங்கள் எல்லாம் வரிசையாக பிளாப் ஆனதால், தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தை தான் மலைபோல் நம்பி உள்ளது.

இதையும் படியுங்கள்... இன்பநிதிக்கு போட்டியாக தளபதி மகனா? அரசியல்வாதி வீட்டு திருமண நிகழ்ச்சியில் விஜய் மகன்!!


ஜேசன் சஞ்சய் படத்தில் ஹீரோயின் யார்?

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் ஹீரோ குறித்த அறிவிப்பு மோஷன் போஸ்டராக வெளியிடப்பட்டாலும் அதில் ஹீரோயினாக யார் நடிக்கிறார் என்கிற தகவலை சீக்ரெட்டாகவே வைத்திருந்தனர். இந்நிலையில், ஜேசன் சஞ்சய் படத்தில் ஹீரோயினாக நடிப்பது யார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை ஃபரியா அப்துல்லா தான் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் நடிகர் சந்தீப் கிஷானுக்கு ஜோடியாக நடித்து வருகிறாராம். அவரும் சந்தீப் கிஷானும் நடிக்கும் காட்சிகள் தான் தற்போது படமாக்கப்பட்டு வருகிறதாம்.

யார் இந்த ஃபரியா அப்துல்லா?

நடிகை ஃபரியா அப்துல்லா தெலுங்கில் பிளாக்பஸ்டர் ஹிட்டான ஜாதி ரத்னலு படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து தெலுங்கில் பிசியாக நடித்து வந்த இவர், தமிழில் ஏற்கனவே நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக வள்ளி மயில் என்கிற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை சுசீந்திரன் இயக்கி உள்ளார். அப்படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அதற்குள் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகிவிட்டார் ஃபரியா அப்துல்லா. இந்த இரண்டு படங்களும் ஹிட்டானால் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... விஜய் மகன் சஞ்சய்க்கு அஜித் கொடுத்த வாக்கு; படப்பிடிப்பு ஆரம்பமாகும் முன்பே இப்படி ஒரு பிரச்சனையா?

Latest Videos

vuukle one pixel image
click me!