கடைசி நேரத்தில் வந்த சிக்கல்; வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை!

அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் இன்று வெளியாக இருந்த வீர தீர சூரன் திரைப்படத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதால் அப்படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Interim ban For Vikram Starrer Veera Dheera Sooran Movie gan

Interim Ban For Veera Dheera Sooran : விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் வீர தீர சூரன். இப்படத்தை எஸ்.யு.அருண்குமார் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கி இருந்தார். இப்படத்தில் நடிகர் விக்ரம், காளி என்கிற கேரக்டரில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கலைவாணி என்கிற கதாபாத்திரத்தில் நடிகை துஷாரா விஜயன் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சர்மூடு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Interim ban For Vikram Starrer Veera Dheera Sooran Movie gan

வீர தீர சூரன் பாகம் 2

வீர தீர சூரன் திரைப்படம் ஒரே நாள் இரவில் நடக்கும் ஒரு ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி உள்ளது. இரண்டு பாகங்களாக இப்படம் உருவாகும் நிலையில், அதன் இரண்டாம் பாகத்தை தான் முதலில் ரிலீஸ் செய்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அவரது இசையில் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இப்படத்தை ரியா ஷிபு தயாரித்துள்ளார். இப்படம் ரம்ஜான் விடுமுறையை ஒட்டி மார்ச் 27ந் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையும் படியுங்கள்... வீர தீர சூரன் vs எம்புரான் : வெற்றியை தட்டிதூக்கப்போவது யார்? பிரபல நடிகர் பளீச் பதில்


வீர தீர சூரன் படத்துக்கு இடைக்கால தடை

இந்த நிலையில், வீர தீர சூரன் படத்தின் ரிலீசுக்கு கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதால் இன்று வெளிநாட்டில் இப்படத்திற்கான ப்ரீமியர் காட்சிகள் கேன்சல் செய்யப்பட்டன. அதேபோல் தமிழ்நாட்டிலும் இப்படம் இன்று காலை 9 மணிக்கு வெளியிட முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர். இப்படத்தை வெளியிட டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

விக்ரம் படத்துக்கு தடை விதிக்கப்பட்டது ஏன்?

அதற்கு காரணம் B4U என்கிற நிறுவனம் தொடர்ந்த வழக்கு தான். வீர தீர சூரன் படத்திற்கு அந்நிறுவனம் பண முதலீடு செய்திருக்கிறது. அதற்காக இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை அந்நிறுவனத்திற்கு எழுதிக்கொடுத்துவிட்டாராம் தயாரிப்பாளர். ஆனால் படத்தின் ஓடிடி உரிமை இன்னும் விற்கப்படாமலேயே படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. ரிலீஸ் தேதி அறிவித்ததால் படத்தை அந்நிறுவனத்தால் ஓடிடியில் விற்க முடியவில்லையாம். இதனால் தாங்கள் முதலீடு செய்த தொகையில் தங்களுக்கு 50 சதவீதம் நஷ்ட ஈடு வழங்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

இதையும் படியுங்கள்...  மார்ச் 27ந் தேதி வீர தீர சூரன் படத்துடன் இத்தனை படங்கள் மல்லுக்கட்ட போகிறதா?

Latest Videos

vuukle one pixel image
click me!