அஜித்தின் 'குட் பேட் அக்லி' தமிழக வசூலில் சாதனை படைக்கும் - பிரபலம் ஓப்பன் டாக்!
ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அஜித் குமார் இணைந்து பணியாற்றியுள்ள 'குட் பேட் அக்லி' படம் தமிழ்நாட்டில் வசூல் சாதனை படைக்கும் என பிரபல தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அஜித் குமார் இணைந்து பணியாற்றியுள்ள 'குட் பேட் அக்லி' படம் தமிழ்நாட்டில் வசூல் சாதனை படைக்கும் என பிரபல தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
அஜித், நடிப்பில் இந்த ஆண்டு வெளியாக உள்ள இரண்டாவது திரைப்படம் 'குட் பேட் அக்லி'. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான, விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன நிலையில், வெற்றிபெறாமல் போனது. இந்த படத்தின் தோல்வி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் என்றாலும், 'குட் பேட் அக்லி' ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை மார்க் ஆண்டனி படத்தை இயக்கி 100 கோடி வசூலை அள்ளிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார்.
இப்படம், அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் 'குட் பேட் அக்லி' படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் நவீன் தற்போது இந்த படம் குறித்து வெளியிட்டுள்ள தகவல், படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
சமீபத்தில் நடந்த ஒரு விளம்பர நிகழ்ச்சியில், பத்திரிகையாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் நவீன் எர்னேனி, "தமிழில், குட் பேட் அக்லி திரைப்படம் புதிய வசூல் சாதனைகளைப் படைக்கும், விநியோகஸ்தர்களைப் பொறுத்தவரையிலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. நிச்சயமாக மிகப்பெரிய ஓபனிங்கைப் பெறும்" என்று தெரிவித்துள்ளார்.
அதே போல் அஜித் குமாரின் 'குட் பேட் அக்லி' ரசிகர்களுக்கு ஒரு ஆக்ஷன் விருந்தாக அமையும் என ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் தெரிவித்தார். படம் குறித்து அவர் பேசும் போது, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் நடிப்பில் வரவிருக்கும் படமான 'குட் பேட் அக்லி', அவரது முந்தைய படமான விடாமுயர்ச்சியில் இல்லாத அதிக ஆற்றல்மிக்க காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.
குட் பேட் அக்லி படத்தில், அஜித் தவிர, சுனில், பிரபு, அர்ஜுன் தாஸ், ராகுல் தேவ், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில், த்ரிஷா கதாநாயகியாக நடிக்க... ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.