தீபிகா படுகோன் கர்ப்பமா? யூகங்களுக்கு யோக மூலம் பதில் சொன்ன பாலிவுட் நட்சத்திரம்!

First Published May 13, 2022, 8:13 PM IST

பாலிவுட் நட்சத்திரம் தீபிகா படுகோன் தற்போது கொடுத்துள்ள ஹாட் யோகா போஸ்..ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 

deepika padukone

கன்னட மொழிகளில் வெளியாகிய ஐஸ்வர்யா என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான தீபிகா படுகோன் பின்னர் பாலிவுட்டில் ஓம் சாந்தி என்னும் படம் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

deepika padukone

பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் முன்னணி நாயகர்களுடன் நடித்ததோடு கவர்ச்சி மற்றும் வித்யாசமான உடைகள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் தீபிகா படுகோன்.

deepika padukone

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார் 3டி தொழில்நுட்பத்தில் இந்த படத்தை ரஜினியின் மகள் சவுந்தர்யா இயக்கி இருந்தார்.

deepika padukone

உலக  சாதனையாளர் விருதை வென்ற முதல் இந்திய நடிகையான தீபிகா படுகோன் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட் முன்னணி நாயகர்களில் ஒருவராக இருக்கும் ரன்வீர் சிங்கை காதல் கரம்பிடித்தார்..

deepika padukone

பாலிவுட் பிரபலமான ரன்வீர் சிங் சமீபத்தில் விமான நிலையத்தில் குழந்தையை தாலாட்டுவது போன்ற போஸை காட்டி இருந்தார். இதனால் தீபிகா ஒருவேளை கர்ப்பமாக இருக்கலாம் என தகவல் பரவி வந்தது.

deepika padukone

இந்நிலையில் தீபிகா தாறுமாறாக உடலை வளைத்து கொடுத்துள்ள போஸால் அவர் கர்ப்பமாக இல்லை என உறுதியாகிவிட்டதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

click me!