
பாலிவுட்டில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் தீபிகா படுகோனே. பெங்களூருவில் பிறந்து வளர்ந்த இவர் கடந்த 2006-ம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த ஐஸ்வர்யா என்கிற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து பாலிவுட்டுக்கு சென்ற தீபிகா படுகோனே அங்கு அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.
நடிகை தீபிகா படுகோனேவுக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடியின் திருமணம் இத்தாலியில் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்பும் பாலிவுட்டில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த தீபிகா படுகோனே பதான், ஜவான், கல்கி என தொடர்ந்து 3 ஆயிரம் கோடி படங்களில் நடித்தார்.
திருமணமாகி 6 ஆண்டுகளாக குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்து வந்த நடிகை தீபிகா படுகோனேவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது. முதல் குழந்தை பெற்றெடுத்துள்ள ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே ஜோடிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் நடிகை தீபிகா படுகோனேவின் சொத்து மதிப்பு பற்றிய விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் ரூ.500 கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரியாக இருக்கிறார். இது தமிழில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய், அஜித், ரஜினிகாந்த் போன்ற பிரபலங்களை விட அதிகம் ஆகும்.
அதுமட்டுமின்றி இந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் தீபிகா படுகோனே திகழ்ந்து வருகிறார். இவர் ஒரு படத்துக்கு ரூ.20 முதல் ரூ.30 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. கோலிவுட் நடிகைகள் 10 முதல் 12 கோடி வரை வாங்கி வரும் நிலையில், அவர்களைவிட டபுள் மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார் தீபிகா.
ஆனால் தீபிகா படுகோனே 500 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளது வெறும் சினிமாவில் வரும் வருமானத்தை வைத்து மட்டுமல்ல, அவர் கிட்டத்தட்ட 12 நிறுவனங்களில் கோடிக்கணக்கில் முதலீடு செய்திருக்கிறார். இதில் சில நிறுவனங்களை அவர் சொந்தமாகவும் வைத்திருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... கைப்புள்ளையுடன் மீண்டும் கைகோர்க்கும் சுந்தர் சி - வெளியான தரமான காமெடி காம்போ அப்டேட்!
நடிகை தீபிகா படுகோனேவுக்கு சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்று உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு KA புரொடக்ஷன்ஸ் என்கிற் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய அவர், அதில் சப்பக் என்கிற படத்தை தயாரித்தார். கடந்த 2020-ம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் தீபிகாவே ஹீரோயினாக நடித்திருந்தார்.
மேலும் சொந்தமாக ஆடை நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார் தீபிகா. All About You என்கிற ஆடை நிறுவனத்தை மிந்த்ரா உடன் சேர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கிய தீபிகா படுகோனே, 18 வயது முதல் 35 வயது வரை உள்ள இளசுகளை கவரும் முனைப்போடு அந்நிறுவனத்தை தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு நடிகை தீபிகா படுகோனே அழகு சாதனை பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினார். 82°E என பெயரிடப்பட்டுள்ள அந்நிறுவனம் மூலம் பேசியல் மாஸ்க், சன் ஸ்கிரீன், மாயிஸ்சரைசர், லிப் பாம், உள்ளிட்ட அழகு சாதன பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.
இதுதவிர Furlenco என்கிற பர்னிச்சர்களை வாடகைக்குவிடும் நிறுவனத்தில் கடந்த 2019-ம் ஆண்டு தீபிகா முதலீடு செய்தார். மேலும் Purplle எனப்படும் ஆன்லைனில் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்திலும் இவர் முதலீடு செய்திருக்கிறார். Epigamia எனப்படும் யோகர்ட் தயாரிப்பு நிறுவனத்திலும் இவர் முதலீடு செய்துள்ளார்.
பெங்களூருவை மையமாக கொண்டு இயங்கி வரும் ஏரோஸ்பேஸ் நிறுவனமான Bellatrixலும் தீபிகா முதலீடு செய்துள்ளார். இதேபோல் மும்பை, புனே, ஐதராபாத், டெல்லி போன்ற நகரங்களில் இயங்கி வரும் எலெக்ட்ரிக் டாக்ஸி நிறுவனமான BluSmart-டிலும் தீபிகா படுகோனே பெரும் தொகையை முதலீடு செய்துள்ளார்.
Mokobara என்கிற டிராவல் பேக் நிறுவனம், Atomberg எனப்படும் ஸ்மார்ட் மின்விசிறி தயாரிப்பு நிறுவனம், Supertails எனப்படும் விலங்குகள் நல நிறுவனம், குருகிராமை மையமாக கொண்டு இயங்கி வரும் Blue Tokai Coffee போன்ற நிறுவனங்களிலும் நடிகை தீபிகா படுகோனே முதலீடு செய்து லாபம் ஈட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... டிசைன் டிசைனா அட்வைஸ்.. ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசுனு பஞ்ச் பேசும் விஜய் சேதுபதி - பிக் பாஸ் புதிய ப்ரோமோ!