DC Movie Day 1 Box Office : பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக மாறிய லோகேஷ்... முதல் நாளே இத்தனை கோடி வசூல் அள்ளியதா டிசி?

Published : Aug 08, 2026, 07:14 AM IST

DC Movie Day 1 Box Office Collection : அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகி உள்ள டிசி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

PREV
15
DC Movie Day 1 Box Office

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலம் அறிமுகமாகி கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி என தொடர்ச்சியாக மாஸ் ஹிட் படங்களை கொடுத்துள்ள இவர், அடுத்தடுத்து பான் இந்தியா படங்களை இயக்க கமிட்டாகி உள்ளார். இந்த பிசி ஷெட்யூலுக்கு மத்தியிலும் அவர் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அந்த படத்தின் பெயர் தான் டிசி. இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன்னர் சாணிக் காயிதம், ராக்கி, கேப்டன் மில்லர் போன்ற படங்களை இயக்கி இருந்தார்.

DC Review : லோகேஷின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? டிசி விமர்சனம் இதோ

25
ஹீரோவாக அறிமுகமான லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்துள்ள படம் என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இப்படத்தில் லோகேஷுக்கு ஜோடியாக சஞ்சனா மற்றும் வாமிகா கப்பி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கலாநிதி மாறன் இப்படத்தை தயாரித்திருந்தார். இப்படத்திற்கு சென்சாரில் ஏ சான்றிதழ் கிடைத்திருந்தது. அளவுக்கு மீறிய ஆக்‌ஷன் காட்சிகள் இருந்ததால், இதற்கு ஏ சான்றிதழ் கிடைத்திருந்தது. டிசி திரைப்படம் நேற்று உலகமெங்கும் ரிலீஸ் ஆனது.

35
டிசி எப்படி இருக்கு?

டிசி திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே அதன் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் தமிழ் சினிமாவில் உள்ள டாப் டைரக்டர்கள் அனைவரும் கலந்துகொண்டு படத்தை கண்டு ரசித்ததோடு, பாசிடிவ் விமர்சனங்களையும் கூறினர். இதையடுத்து நேற்று படத்தை பார்த்த ரசிகர்கள் லோகேஷ் கனகராஜின் நடிப்பை பாராட்டி வருவதோடு, இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருப்பது அனிருத்தின் இசை தான் என சிலாகித்து கூறினர். அதுமட்டுமின்றி படத்தின் பின்னணி இசை வேறலெவலில் இருப்பதாக பாராட்டினர்.

45
டிசி படத்தின் வசூல்

இந்நிலையில், டிசி திரைப்படத்தின் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்துள்ள இப்படம் முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸில் மாஸ் சம்பவம் செய்துள்ளது. இப்படம் நேற்று மட்டும் உலகளவில் ரூ.5.70 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளதாக சாக்னில்க் தளத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. அதிலும் இந்தியாவில் மட்டும் இப்படம் 4.70 கோடி வசூலித்துள்ளதாகவும், வெளிநாடுகளில் ரூ.1 கோடி வசூலித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளன. முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ளது ஆச்சர்யமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

55
சாதனை படைத்த லோகேஷ்

அதுமட்டுமின்றி அதிகபட்சமாக டிசி திரைப்படத்தின் தமிழ் வெர்ஷன் ரூ.2.60 கோடி வசூலித்திருக்கிறது. இதையடுத்து ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மட்டும் இப்படம் ரூ.1.40 கோடி வசூல் செய்துள்ளது. கேரளாவில் டிசி திரைப்படத்திற்கு 60 லட்சம் வசூல் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் ரூ.40 லட்சமும், இந்தியாவின் பிற மாநிலங்களில் ரூ.30 லட்சமும் வசூல் செய்துள்ளதாக சாக்னில்க் தளம் குறிப்பிட்டுள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் டிசி படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories