க்ரீன் கலர் புடவையில் ட்ரெடிஷனல் லுக்.. ஷாலின் ஜோயாவின் க்யூட் கிளிக்ஸ் இதோ..

ஷாலின் ஜோயாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Shaalin Zoya

கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் ஷாலின் ஜோயா. நடிகை, தொகுப்பாளினி, இயக்குனர், டான்சர் என பன்முக திறமை கொண்டவராக இருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையுலகில் அறிமுகமான ஷாலின் ஜோயா தொடர்ந்து பல மலையாள படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார்.

Shaalin Zoya

மேலும் சில மலையாள நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி உள்ளார். இவை தவிர மலையாள குறும்படங்கள், ஆங்கில குறும்படங்களிலும் நடித்துள்ளார். ஷாலின் ஜோயா தமிழில் அறிமுகமானது 2016-ம் ஆண்டு வெளியான ராஜா மந்திரி படத்தில் தான்.


Shaalin Zoya

இதை தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான கண்ணகி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தின் புரோமோஷன் பணியின் போது தான் ஷாலின் ஜோயா பிரபல யூ டியூபர் டிடிஎஃப் வாசனை சந்தித்தார். அதன்பின்னர் இருவரும் நண்பர்களாக இருந்த நிலையில் பின்னர் காதலர்களாக மாறினர். இருவரும் அவ்வப்போது தங்கள் போட்டோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Shaalin Zoya

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் ஷாலின் போட்டியாளராக களமிறங்கி உள்ளார். இந்த நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்றுள்ள ஷாலின் ஜோயா தனது க்யூட்டான செயல்களால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

Shaalin Zoya

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷாலின் ஜோயா, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பச்சை நிற புடவையில் ட்ரெடிஷனல் லுக்கில் இருக்கும் போட்டோக்களை அவர் பதிவிட்டுள்ளார். அவரின் போட்டோக்களுக்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன. 

Latest Videos

click me!