சோபின் சாகீர், நாகர்ஜுனா இன்ட்ரோ செம..! இடைவேளை பயங்கரம்.. மிரட்டும் கூலி

Published : Aug 14, 2025, 10:12 AM IST

ரஜினிகாந்தின் 171வது படமான 'கூலி' வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ரஜினி, நாகார்ஜுனாவின் அறிமுகக் காட்சிகள், சவுபின் ஷாயிரின் நடிப்பு, அனிருத்தின் இசை பாராட்டப்பட்டுள்ளன. 

PREV
14

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘கூலி’ திரைப்படம் (ஆகஸ்ட் 14) இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரஜினியின் 171வது திரைப்படமாக அமைந்துள்ள கூலி திரைப்படம்  ரஜினியின் 50 ஆண்டு திரைப்பயணத்தைக் கொண்டாடும் வகையில் வெளியாகியுள்ளது. 

இந்த திரைப்படத்தில் படத்தில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா, சவுபின் ஷாயிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இந்தப் படம் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் (LCU) உடன் தொடர்பில்லாத, ரஜினிக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கதை என்று கூறியுள்ளார்.

24

ரஜினியின் கூலி திரைப்படம் கேரளாவில் காலை 6 மணிக்கும், பெங்களூருவில் அதிகாலை 5 மணிக்கும் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது. ரசிகர்கள் அதிகாலை முதல் திரையரங்கை விழாக்கோலம் ஆக்கினர். 

இந்த நிலையில் கூலி திரைப்பoத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. ரஜினி மற்றும் நாகார்ஜுனாவின் அறிமுக காட்சிகள், சவுபின் ஷாயிரின் நடிப்பு, அனிருத்தின் இசை ஆகியவை சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். இரண்டாம் பாதியில் கதை சில இடங்களில் தொய்வடைவதாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

34

ரஜினியின் ‘கூலி’ திரைப்படம் ஆக்ஷன் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளதாகவும், ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டமான திரைப்படமாக வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கூலி திரைப்படத்தை பார்த்த சினிமா விமர்சகர் வெளியிட்டுள்ள பதிவில், கூலி திரைப்படம் முதல் பாதி ஆவரேஜ்ஜாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மற்றும் நாகார்ஜுனாவின் அறிமுக காட்சிகள் மிகவும் ஸ்டைலாக எடுக்கப்பட்டுள்ளதாக பாராட்டியுள்ளார். ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த மஞ்சுமள் பாய்ஸ்  நாயகன் சௌபின் இந்த திரைப்படத்தில் கலக்கி இருப்பதாக பதிவிட்டுள்ளார். சௌபினின் கதாபாத்திரம் செமயாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

44

ரஜினி திரைப்படத்தின் கதை வெகுவாக ஈர்க்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் திரையரங்கில் கொண்டாட்டமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். லோகேஷின் முந்தைய படங்களுடன் ஒப்பிடும்போது, சற்று ஏமாற்றம் அளித்துள்ளதாக கூறியுள்ளார். 

படத்தின் இடைவேளை மற்றும் ட்டுவிஸ்டும் முதல் பாதியில் உச்சக்கட்டமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். சூப்பரான ஆக்‌ஷன் திரைப்படம் என தெரிவித்துள்ளவர் திரையரங்கில் படத்தை பார்க்க வந்தவர்களுக்கு எந்த ஏமாற்றமும் தராது என தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories