விஜய் நடித்துள்ள வாரிசு படத்திற்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ, அதேஅளவு எதிர்பார்ப்பு அப்படத்தின் ஆடியோ லாஞ்ச்சுக்கும் உள்ளது. ஏனெனில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விஜய் நடித்துள்ள படத்திற்கு இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடத்தப்படவில்லை. அதுமட்டுமின்றி விஜய்யின் மேடைப் பேச்சைக் கேட்கவும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
அந்த விழா நடைபெற இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தற்போது அது திட்டமிட்டபடி நடக்குமா என்கிற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கி உள்ளது. ஏனெனில் சீனாவில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வாய்ப்புள்ளது.
மேலும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடக்க இருப்பதால் இதில் அதிகளவில் மக்கள் கூட வாய்ப்புள்ளது. ஒருவேளை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் இந்த விழா திட்டமிட்டபடி நடக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... கொரோனாவை விட ஆபத்தானது கொரோனா மாறுபாடான XBB வைரஸ்… அறிகுறிகள் என்ன? பாதுகாத்துக்கொள்வது எப்படி?