விஜய் நடித்து முடித்துள்ள 'வாரிசு' திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு... ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக, படம் குறித்த முக்கிய தகவல் அவ்வப்போது வெளியாகி வருகிறது.
நேற்றைய தினம் கூட, 'வாரிசு', படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெற உள்ள தகவலை, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான, வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் அதிகார பூர்வமாக வீடியோவுடன் வெளியிட்டது.
மேலும், வாரிசு படத்தில் இருந்து இதுவரை வெளியாகியுள்ள, ரஞ்சிதமே பாடல், தீ தளபதி பாடல் மற்றும் அண்மையில் வெளியான, soul of varisu ஆகிய மூன்று பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் கதை குறித்து வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
பல படங்களில் இதே போன்ற குடும்ப செண்டிமெண்ட் மற்றும் பிஸ்னஸ் எதிரிகள் பற்றிய கதை வெளியாகி இருந்தாலும், அரைத்த மாவையே அரைக்காமல், எப்படி இந்த படத்தை வம்சி இயக்கியுள்ளார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, சம்யுக்தா, சங்கீதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.