GV Prakash and Saindhavi Divorce: பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவருக்கும் நீதிமன்றம் தற்போது விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார், தன்னுடைய பள்ளி தோழியும் - காதலியான பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த ஆண்டு இருவரும் தங்களின் 11 ஆண்டு திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர உள்ளதாக அறிவித்தனர்.
25
ஏன் விவாகரத்து?
ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியின் இந்த விவாகரத்து முடிவு, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து சைந்தவி போட்ட பதிவில், "நீண்ட யோசனைக்குப் பிறகு, 11 வருட திருமண வாழ்க்கையை நானும் ஜி.வி.பிரகாஷும் முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளோம். பரஸ்பர மரியாதையை பேணி, எங்கள் இருவரின் மன அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம் என தெரிவித்திருந்தார்.
35
சைந்தவி - ஜிவி போட்ட பதிவு:
மேலும் மிகவும் தனிப்பட்ட இந்த மாற்றத்தின் போது, எங்கள் தனிப்பட்ட சுதந்திரத்தை புரிந்து கொண்டு மதிக்க வேண்டும் என்று ஊடகங்கள் மற்றும் நண்பர்களிடம் கேட்டுக்கொள்கிறோம். பிரிவது கடினம் என்றாலும், இதுவே நாங்கள் இருவரும் எடுக்கக்கூடிய சிறந்த முடிவு என்பதை உணர்கிறோம். இந்த கடினமான நேரத்தில் உங்கள் புரிதலும் ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியம். நன்றி," என்று சைந்தவி பதிவிட்டிருந்தார். இதே பதிவை ஜி.வி.பிரகாஷ் குமாரும் பகிர்ந்திருந்தார்.
45
மீண்டும் இணைய ஆசைப்பட்ட குடும்பத்தினர்:
இருவரும் விவாகரத்தை அறிவித்த பின்னரும், ஒன்றாக மேடை நிகழ்ச்சிகளில் பணியாற்றினர். ஜிவி பிரகாஷ்னும் தன்னுடைய சைந்தவிக்கு தன்னுடைய இசையில் பாட வாய்ப்பு கொடுத்தார். சில பிரபலங்கள் விவாகரத்தை அறிவித்த பின்னர், ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து கூட பேசாத நிலையில்... இவர்கள் இணைந்து பணியாற்றியது ஒருவர்மேல் ஒருவர் வைத்திருக்கும் பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது. அதே போல் ரசிகர்கள் மட்டும் இன்றி, ஜிவி பிரகாஷின் அம்மா ரிஹானா உட்பட அவர்களின் குடும்பத்தினர் மீண்டும் ஜிவி - சைந்தவி இணைய வேண்டும் என தங்களின் விருப்பத்தை தெரிவித்தனர்.
55
அன்வி விஷயத்தில் ஜிவி எடுத்த முடிவு:
ஆனால் இருவருமே விவாகரத்தில் உறுதியாக இருந்த நிலையில், பரஸ்பரம் விவாகரத்து கோரி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு (செப்டம்பர் 30ந்) தேதி அதாவது இன்று வழங்கப்பட்டது. ஜிவி மற்றும் சைந்தவிக்கு அவர்களின் விருப்பப்படி விவாகரத்து வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதே போல் ஜிவி பிரகாஷ் தங்களுடைய மகள் அன்வி சைந்தவியுடன் இருப்பதற்கு எந்த ஒரு அச்சோதனையும் இல்லை என அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.