ஓடிடி தளங்கள் தற்போது பிரபலமாகி வருகின்றன. திரையரங்குகளுக்குச் செல்வதை விட, வீட்டிலிருந்தபடியே படங்களைப் பார்ப்பதையே பலரும் விரும்புகிறார்கள். அதிக கட்டணம் செலுத்தி திரையரங்குகளில் படம் பார்ப்பதைத் தவிர்க்கிறார்கள். குறைந்த செலவில் வீட்டிலிருந்தபடியே குடும்பத்துடன் படம் பார்ப்பதையே விரும்புகிறார்கள். மேலும், நல்ல கதைகளைக் கொண்ட வெப் சீரிஸ்களும் வெளியாகின்றன. இதனால் ஓடிடியில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களுக்கான மவுசு அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
28
இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்கள்
ஆகஸ்ட் 14-ந் தேதி தியேட்டரில் வெறும் இரண்டு படங்கள் தான் ரிலீஸ் ஆகிறது. அதில் ஒன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி, மற்றொன்று ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த வார் 2. இதில் ரஜினிகாந்தின் கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் சத்யராஜ், செளபின் சாஹிர், நாகர்ஜுனா, உபேந்திரா, அமீர்கான், ஸ்ருதிஹாசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இது பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகிறது.
அதேபோல் வார் 2 திரைப்படமும் பான் இந்தியா அளவில் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகாமிறார் ஜூனியர் என்.டி.ஆர். இப்படத்தை அயன் முகர்ஜி இயக்கி உள்ளார். இப்படத்தில் நாயகியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் கதையம் கொண்ட படமாக வார் 2 இருக்கும் என கூறப்படுகிறது.
38
ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள்
ஜீ5ல் அனுபமா பரமேஸ்வரனின் ஜே.எஸ்.கே
அனுபமா பரமேஸ்வரன் நடித்த மலையாளப் படம் 'ஜே.எஸ்.கே - ஜானகி V v/s ஸ்டேட் ஆஃப் கேரளா' இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தின் தலைப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது. சிறிய மாற்றத்துடன் படம் வெளியானது. தற்போது ஜீ5ல் ஆகஸ்ட் 15 முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது. இதில் ஜானகியாக அனுபமா நடித்துள்ளார். அவருடன் சுரேஷ் கோபி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ஜான் ஆபிரகாம், மனுஷி சில்லர் நடித்த ஹிந்திப் படம் 'தெஹ்ரான்' ஆகஸ்ட் 14 முதல் ஜீ5ல் வெளியாகிறது. இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்தை அருண் கோபாலன் இயக்கியுள்ளார். சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதால் ஓடிடியில் வெளியிடப்படுகிறது.
58
கான்ஸ்டபிள் கனகம்
வர்ஷா பொல்லம்மா நடித்த 'கான்ஸ்டபிள் கனகம்' வெப் சீரிஸ் ஓடிடியில் வெளியாகிறது. பிரசாந்த் குமார் திம்மலா இயக்கியுள்ள இந்தக் காவல்துறை தொடர், ஆகஸ்ட் 14 முதல் ஈடிவி வின்னில் வெளியாகிறது. ராஜீவ் கனகாலா, ஸ்ரீனிவாஸ் அவசராலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
68
'அந்தேரா' சீசன் 1
ஹிந்தி வெப் சீரிஸ் 'அந்தேரா' ஆகஸ்ட் 14 முதல் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. ராகவ் டார் இயக்கியுள்ள இந்தத் திகில் தொடரில் பிரஜக்தா கோலி, சுர்வீன் சாவ்லா, பிரியா பபட், கரண்வீர் மல்ஹோத்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.
78
பட்டர்பிளை சீசன் 1
ஹாலிவுட் சீரிஸ் 'பட்டர்பிளை' சீசன் 1 ஆகஸ்ட் 13 முதல் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. அதேபோல், 'சாஸேஜ் பார்ட்டி: ஃபுட் டோபியா' சீசன் 2 அனிமேஷன் சீரிஸ் ஆகஸ்ட் 13ல் வெளியாகிறது. 'அபாண்டன்ட்: தி உமன் இன் தி டிகேயிங் ஹவுஸ்' என்ற ஹாலிவுட் சீரிஸ் ஆகஸ்ட் 15ல் வெளியாகிறது.
இன்று முதல் இரண்டு சீரிஸ்கள் வெளியாகின்றன. ஃபைசல் ஷேக், ஷெஃபாலி பக்கா நடித்த 'லவன்சர்' சீரிஸ் இன்று (ஆகஸ்ட் 11) ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. 'மன் பசந்த் கி ஷாதி' என்ற சீரிஸும் இன்று முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
88
சாரே ஜஹான் சே அச்சா
ஹிந்திப் படம் 'சாரே ஜஹான் சே அச்சா' ஆகஸ்ட் 13 முதல் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது. இந்த உளவாளித் த்ரில்லர் படத்தில் பிரதிக் காந்தி, சன்னி ஹிந்துஜா, சுஹைல் நய்யர் ஆகியோர் நடித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.