ஓடிடி தளத்தில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை ஓர்மேக்ஸ் தளம் வெளியிட்டுள்ள நிலையில், அதில் என்னென்ன தமிழ் படங்கள் உள்ளது என்பதை பார்க்கலாம்.
ஓடிடி தளங்கள் சினிமா விரும்பிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். முன்பெல்லாம் உலக சினிமாவை பார்க்க விரும்புபவர்கள் அதற்கான சிடிக்களை தேடி அலைய வேண்டும். ஆனால் தற்போது கையடக்க செல்போனில் உலகின் எந்த மூலையில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் அதை பார்க்கலாம். இதனால் ரசிகர்களின் ரசனையும் மாறி இருக்கிறது. அவர்களின் ரசனைக்கு ஏற்ப இந்திய படங்களும் உலகத் தரத்தில் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அக்டோபர் 13 முதல் 19-ம் தேதி வரை ஓடிடி தளங்களில் அதிக வியூஸ் அள்ளிய படங்கள் மற்றும் வெப் தொடரின் பட்டியல் வெளியாகி உள்ளது.
24
டாப் 5 படங்கள்
ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய படங்கள் பட்டியலில் மகாவதார் நரசிம்மா திரைப்படம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இப்படத்திற்கு 11 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வரும் பைனல் டெஸ்டினேசன் என்கிற ஹாலிவுட் திரைப்படம் 14 லட்சம் வியூஸ் உடன் 4ம் இடத்தில் உள்ளது. இதையடுத்து மூன்றாவது இடத்தை மிராய் என்கிற தெலுங்கு திரைப்படம் கைப்பற்றி இருக்கிறது. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இப்படத்திற்கு 20 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது.
34
அதிக வியூஸ் அள்ளிய கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும், அதற்கான மவுசு குறைந்தபாடில்லை. இப்படத்தை தீபாவளிக்கு சன் டிவியில் ஒளிபரப்பினார்கள். இருந்த போதிலும் இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் 22 லட்சம் வியூஸ் அள்ளி இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் முதலிடத்தை பிடித்திருக்கிறது வார் 2 திரைப்படம். அயன் முகர்ஜி இயக்கிய இப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்திருந்தனர். நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகி வரும், இப்படம் 53 லட்சம் வியூஸ் அள்ளி முதலிடத்தில் உள்ளது.
ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய வெப் தொடர்கள் பட்டியலில் தி கேம் என்கிற தமிழ் வெப் தொடர் 5-ம் இடத்தில் உள்ளது. ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவான இந்த வெப் தொடர் நெட்பிளிக்ஸில் 10 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக நான்காம் இடத்திலும் தமிழ் வெப் தொடரான போலீஸ் போலீஸ் தான் உள்ளது. மிர்ச்சி செந்தில் நடித்த இந்த வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இதற்கு 13 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகும் குருக்ஷேத்ரா என்கிற வெப் தொடர் 22 லட்சம் வியூஸ் உடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. ஜியோ ஹாட்ஸ்டாரில் உள்ள சேர்ச் என்கிற வெப் தொடர் 24 லட்சம் வியூஸ் உடன் 2ம் இடத்தில் உள்ளது. முதலிடத்தை ஜம்னாபார் என்கிற வெப் தொடரின் இரண்டாவது சீசன் பிடித்துள்ளது. அமேசான் பிரைமில் உள்ள இந்த வெப் தொடர் 30 லட்சம் வியூஸ்களை அள்ளி இருக்கிறது.