பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பேமஸ் ஆன சம்யுக்தா, தன் நெருங்கிய தோழியின் முன்னாள் கணவரை, இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ள தகவல் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் சம்யுக்தா. மாடல் அழகியான இவர், அந்நிகழ்ச்சிக்கு பின்னர் சினிமாவில் பிசியானார். அதன்படி வாரிசு, காஃபி வித் காதல், துக்ளக் தர்பார், மை டியர் பூதம் போன்ற படங்களில் நடித்த சம்யுக்தாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகனும் இருக்கிறார். அண்மையில் தன்னுடைய முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற மகிழ்ச்சியை பகிர்ந்திருந்த சம்யுக்தா, தற்போது இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி வருகிறார். அவர் காதலித்து வரும் அந்த நபர் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
24
சம்யுக்தாவின் காதலன் யார்?
நடிகை சம்யுக்தா 2-வதாக திருமணம் செய்துகொள்ள உள்ள நபர் வேறுயாருமில்லை, பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரும், முன்னாள் சிஎஸ்கே கிரிக்கெட் வீரருமான அனிருதா ஸ்ரீகாந்த் தான். கிரிக்கெட் ஜாம்பவான் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தின் மகனான அனிருதா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சில சீசன்கள் விளையாடி இருக்கிறார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வரும் இவரும், சம்யுக்தாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி வந்த நிலையில், தீபாவளி பண்டிகையை இருவரும் ஜோடியாக கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டு தங்கள் காதலை உறுதி செய்துள்ளனர்.
34
சம்யுக்தாவின் முதல் கணவர் யார்?
நடிகை சம்யுக்தாவின் முதல் கணவர் பெயர் கார்த்திக். அவர் சம்யுக்தாவுக்கு குழந்தை பிறந்த பின்னர், அவரை விட்டு துபாய்க்கு சென்றிருக்கிறார். ஆனால் அதன்பின் திரும்பி வரவே இல்லையாம். பின்னர் துபாயில் அவருக்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார் சம்யுக்தா. அந்த சமயத்தில் கொரானா ஊரடங்கு வந்ததால் சம்யுக்தாவாலும் சில ஆண்டுகள் அவரைத் தேடி துபாய்க்கு செல்ல முடியாமல் போனது. அதுமட்டுமின்றி சம்யுக்தாவுக்கு விவாகரத்து கொடுக்காமல் கார்த்திக் டிமிக்கி கொடுத்து வந்திருக்கிறார். ஒரு வழியாக அண்மையில் டைவர்ஸ் வாங்கிய சம்யுக்தா தற்போது 2-வது திருமணத்துக்கு தயாராகிவிட்டார்.
அனிருதா ஸ்ரீகாந்தும் ஏற்கனவே திருமணம் ஆனவர் தான். இவர் ஆர்த்தி வெங்கடேஷ் என்பவரை கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் சில ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதில் ஷாக்கிங் தகவல் என்னவென்றால், அனிருதா ஸ்ரீகாந்தின் முதல் மனைவி ஆர்த்தியும், சம்யுக்தாவும் நெருங்கிய தோழிகளாக இருந்தவர்கள். ஆர்த்தி விவாகரத்து பெற்றதும் அனிருதா ஸ்ரீகாந்துக்கு இரண்டாம் தாரமாக மாறி இருக்கிறார் சம்யுக்தா. இதனால் ஆர்த்தி - அனிருதா பிரிந்ததற்கு சம்யுக்தா தான் காரணமா என்கிற கேள்வியையும் இணையவாசிகள் எழுப்பி வருகிறார்கள்.