தமிழ் சினிமா ரசிகர்களை தன்னுடைய ஸ்டைலாலும், நடிப்பாலும் கட்டிப்போட்ட மூன்றெழுத்து மந்திரம் தான் ரஜினி. அபூர்வ ராகங்களில் தொடங்கிய இவரது திரைப்பயணம், 50 ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக சென்றுகொண்டிருக்கிறது. இவர் நடிப்பில் அண்மையில் ரிலீஸ் ஆன கூலி திரைப்படம் ஏராளமான நெகடிவ் விமர்சனங்களை சந்தித்தாலும், அதையும் மீறி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 14ந் தேதி திரைக்கு வந்த இப்படம் இரண்டு வாரங்களைக் கடந்தும் வெற்றிநடை போட்டு வருகிறது. இவ்வளவு நெகடிவ் விமர்சனங்கள் வந்தும் சூப்பர்ஸ்டார் என்கிற ஒற்றை மனிதரால் மட்டுமே இது சாத்தியம் என்று திரையுலகமே மெச்சுகிறது.
24
பாக்ஸ் ஆபிஸ் கிங்
தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார் என்கிற போட்டி ரஜினிகாந்த் மற்றும் விஜய் இடையே தொடர்ந்து நீடித்து வருகிறது. இருப்பினும் அதிக வசூல் அள்ளிய படங்களில் ரஜினிகாந்த் தான் முதலிடத்தில் உள்ளார். அவரின் ஜெயிலர், 2.0 ஆகிய படங்கள் 650 கோடிக்கு மேல் வசூலித்து டாப்பில் உள்ளன. விஜய் அதிகபட்சமாக 600 கோடி வசூல் அள்ளி இருக்கிறார். லியோ படம் அந்த சாதனையை படைத்திருந்தது. அதன்பின் அவர் நடித்த கோட் திரைப்படம் வெறும் 464 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது. இந்த நிலையில், கூலி படத்தின் மூலம் 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளி தான் ஒரு பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் ரஜினி.
34
கூலி படைத்த சாதனை
கூலி படத்தின் மூலம் ரஜினிகாந்த் தரமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி அவர் நடித்து 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளும் மூன்றாவது படம் இதுவாகும். இதற்கு முன்னர் ஷங்கர் - சூப்பர்ஸ்டார் கூட்டணியில் உருவான எந்திரன் 2.0 திரைப்படம் இந்த சாதனையை படைத்திருந்தது. அதற்கு அடுத்தபடியாக கடந்த 2023-ம் ஆண்டு ரிலீஸ் ஆன ஜெயிலர் திரைப்படம் இந்த மைல்கல்லை எட்டி இருந்தது. இந்த பட்டியலில் லேட்டஸ்டாக கூலி படம் இணைந்துள்ளது. மூன்று 500 கோடி வசூல் படங்களை கொடுத்த முதல் ஹீரோ என்கிற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகி இருக்கிறார் ரஜினி.
மேலும் விஜய்யால் முறியடிக்க முடியாத சாதனையாகவும் இது மாறி உள்ளது. நடிகர் விஜய் இதுவரை ஒரே ஒரு 500 கோடி வசூல் படத்தை மட்டுமே கொடுத்திருக்கிறார். அவர் கைவசம் தற்போது ஜனநாயகன் என்கிற திரைப்படம் மட்டுமே உள்ளது. அப்படம் தான் விஜய்யின் கடைசி படம். அதன்பின்னர் அரசியலில் களமிறங்க உள்ளார் விஜய். ஜனநாயகன் படம் 500 கோடி வசூலித்தாலும் அது விஜய்யின் இரண்டாவது 500 கோடி வசூல் படமாகவே இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ரஜினி தற்போதே மூன்று 500 கோடி வசூல் படங்களை கொடுத்துவிட்டார். இதனால் அது எந்த தமிழ் நடிகராலும் முறியடிக்க முடியாத சாதனையாகவே இருக்க வாய்ப்பு உள்ளது.