யார்ரா இந்த பையன்? எடுத்த எல்லா படமும் ஹிட்; கோலிவுட்டின் ஜீரோ பிளாப் இயக்குனர்!

Published : Dec 20, 2024, 12:37 PM ISTUpdated : Dec 20, 2024, 02:05 PM IST

கமல்ஹாசன், ரஜினிகாந்த், தளபதி விஜய் ஆகியோரின் படங்களை இயக்கி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த ஜீரோ பிளாப் இயக்குனரின் குழந்தைப்பருவ புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

PREV
15
யார்ரா இந்த பையன்? எடுத்த எல்லா படமும் ஹிட்; கோலிவுட்டின் ஜீரோ பிளாப் இயக்குனர்!
Lokesh kanagaraj Childhood Photo

சினிமா ஒருவரின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றும் என்பதற்கு சிறந்த உதாரணம் இவர்தான். பொள்ளாச்சி அருகே ஒரு வங்கியில் வேலை பார்த்து வந்த இவர், சினிமாவில் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியதில்லை. கமல்ஹாசனின் தீவிர ரசிகனாக இருந்ததால் அவரின் படங்களே இந்த இயக்குனருக்கு ஒரு பல்கலைக்கழகமாக அமைந்தது. அப்படி சினிமாவில் அறிமுகமான 7 ஆண்டுகளில் நம்பர் 1 இயக்குனராக உயர்ந்ததோடு, பான் இந்தியா அளவில் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக திகழ்ந்து வருகிறார். அந்த இயக்குனர் வேறுயாருமில்லை லோகேஷ் கனகராஜ் தான். அவரின் குழந்தைப்பருவ புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

25
Lokesh kanagaraj Rare Childhood Photos

மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகி, தன் முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். பின்னர் கைதி படத்தை இயக்கி திரும்ப திரும்ப பார்க்க வைத்த லோகேஷ் கனகராஜுக்கு, நடிகர் விஜய் கொடுத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் மாஸ்டர் திரைப்படம். அப்படத்தின் வெற்றி அவரை தன்னுடைய குருவான கமல்ஹாசனிடம் கொண்டு சென்றது. மாஸ்டர் ஹிட் ஆனது கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கினார் லோகி.

இதையும் படியுங்கள்...ஸ்ருதி மட்டுமில்ல கூலி படத்தில் லோகேஷ் ஒளித்துவைத்துள்ள 2வது ஹீரோயின் யார் தெரியுமா?

35
Director Lokesh Kanagaraj

இதுவரை ஹாலிவுட் படங்களில் மட்டும் யூனிவர்ஸ் கான்செப்டை பார்த்து வந்த ரசிகர்களுக்கு கோலிவுட்டிலும் ஒரு யூனிவர்ஸை உருவாக்கி தனக்கென ஒரு தனி ரூட்டை போட்டார் லோகி. விக்ரம் படத்திற்கு பின் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் விரிவடைந்து, அதில் லியோவாக நடிகர் விஜய்யும் இணைந்தார். விஜய், கமல் என இரண்டு ஜாம்பவான் நடிகர்களுடன் பணியாற்றிய லோகேஷ் கனகராஜ் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

45
Lokesh Kanagaraj with vijay and Kamal

கூலி படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தை முடித்த கையோடு, கார்த்தியை வைத்து கைதி 2 படத்தை இயக்க உள்ள லோகேஷ் கனகராஜ், சூர்யாவுடன் ரோலெக்ஸ், இரும்புக் கை மாயாவி என இரண்டு படங்களில் பணியாற்ற உள்ளார். இப்படி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு யாரும் கிட்டகூட நெருங்க முடியாத அளவுக்கு படங்களுடன் செம பிசியாக உள்ள லோகேஷ் கனகராஜ், படத்தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

55
Lokesh kanagaraj Unseen Childhood Photos

அவர் தயாரித்த முதல் படம் ஃபைட் கிளப், இதைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் பென்ஸ் திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இதுவும் எல்.சி.யுவில் ஒரு அங்கமாகும். இதுதவிர யூடியூப் பிரபலத்தை வைத்து மிஸ்டர் பாரத் என்கிற படத்தையும் தயாரிக்கிறார். இப்படி இயக்குனர், தயாரிப்பாளர் என பம்பரம் போல் பிசியாக சுழன்று வரும் லோகேஷ் கனகராஜ் சிறு வயதில் தனது குடும்பத்தோடு எடுத்துக்கொண்ட குழந்தைப்பருவ புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... கோலிவுட் ‘ஹிட்’மேன் லோகேஷ் கனகராஜ் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Read more Photos on
click me!

Recommended Stories