ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14-ந் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் காளி வெங்கட், அமீர்கான், சோபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், நாகர்ஜுனா, ரச்சிதா ராம், சார்லி, மாறன், உபேந்திரா, தமிழ் என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்து இருந்தார். இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 151 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
24
கூலி பாக்ஸ் ஆபிஸ் வசூல்
கூலி திரைப்படத்திற்கு ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததால் அப்படம் ரிலீஸ் ஆன முதல் நான்கு நாட்களிலேயே ரூ.404 கோடி வசூலித்தது. இதன் பின்னர் வார நாட்களில் கூலி படத்தின் வசூல் டல் அடிக்கத் தொடங்கியது. பின்னர் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பிக் அப்பாகி, இரு தினங்களும் உலகளவில் ரூ.15 கோடி வசூலித்தது. இதில் நேற்று மட்டும் கூலி படத்தின் தமிழ் வெர்ஷன் ரூ.6.69 கோடி வசூலித்துள்ளது. தெலுங்கு பதிப்பு ரூ.1.84 கோடியும், இந்தி வெர்ஷன் ரூ.2.73 கோடியும், கன்னட வெர்ஷன் ரூ.18 லட்சமும் வசூலித்தி இருக்கிறது. இதில் நேற்று இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ.11.44 கோடி வசூலித்திருக்கிறது.
34
கோட் சாதனையை முறியடித்த கூலி
கூலி திரைப்படம் 11 நாட்களில் உலகளவில் ரூ.479 கோடி வசூலித்துள்ள கையோடு ஒரு மிகப்பெரிய சாதனையையும் முறியடித்து உள்ளது. அதன்படி இப்படம் நடிகர் விஜய்யின் கோட் பட வசூல் சாதனையை முறியடித்து இருக்கிறது. கோட் திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூலே ரூ.464.54 கோடி தான். அந்த சாதனையை 11 நாட்களில் முறியடித்து மாஸ் காட்டி உள்ளது கூலி. இந்த வாரமும் பெரியளவில் புதுப்படங்கள் திரைக்கு வராததால், கூலியின் வசூல் வேட்டை இந்த வார இறுதியிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக இப்படம் இந்த வார இறுதிக்குள் 500 கோடி வசூலை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூலி திரைப்படம் 1000 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் பாதி கூட வராததற்கு காரணம் அதற்கான நெகடிவ் விமர்சனங்கள் தான். வழக்கமான லோகேஷ் படம் போல் இல்லாமல் இப்படத்திற்கு சென்சாரில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு இருந்தது. அதனால் குழந்தைகளோடு படம் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டது. அப்படத்தின் வசூல் எதிர்பார்த்தபடி இல்லாததற்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கியதில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை லியோ படைத்திருந்தது. அதனை கூலி முறியடிக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.