இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், கடந்த மூன்று சீசன்களிலும் காமெடியில் கலக்கி வரும், மணிமேகலை திடீர் என "இன்று தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தன்னுடைய கடைசி நாள், 2019 முதல் சீசன் முதல் CWC இல் எனது அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் உங்கள் அனைவருமே அபரிமிதமான அன்பைப் பொழிந்திருக்கிறீர்கள். எனக்கு வழங்கப்பட்ட. எனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை எப்போதுமே சிறந்ததாக மாற்ற என் உழைப்பை போட்டிருக்கிறேன். குக் வித் கோமாளியின் உங்களை சந்தோசப்படுத்த உண்மையாக இருந்திருக்கிறேன். உங்களிடம் இருந்து எதிர்பாராத அளவு அன்பு கிடைத்தது. அது நான் செய்த செய்யும் மற்ற விஷயங்களிலும் இருக்கும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.