லைட்மேன்களுக்கு உதவும் ஏ.ஆர்.ரஹ்மான்
ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு என்று பல மொழிகளில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். எல்லா புகழும் இறைவனுக்கே என்ற தாரக மந்திரத்தை தன்னுள் கொண்ட அற்புதமானவர்.
சென்னையில் இசை நிகழ்ச்சி
ஏராளமான இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். சினிமா துறையில் எண்ணற்ற சாதனைகளை படைத்தவர். சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு சினிமா துறையில் லைட்மேன்களுக்கு உதவ முன்வந்துள்ளார்.
ஆர் கே செல்வமணி
இது குறித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியிருப்பதாவது: சினிமா துறையில் ஒரு அங்கமான லைட்மேன்களுக்கு அவர்கள் பணியாற்றும் போது ஏதேனும் விபத்து நேர்ந்தால், அவர்களுக்கு நிரந்தரமாக உதவும் வகையில் ஒரு நிதி ஆதாரத்தை ஏற்படுத்த உள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டரங்களில் இசை நிகழ்ச்சி
இதற்காக வரும் மார்ச் 19 ஆம் தேதி சென்னையில் நேரு உள்விளையாட்டரங்கில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார். அதன் மூலம் வரும் நிதியைக் கொண்டு படப்பிடிப்பின் போது லைட்மேன்களுக்கு ஏதேனும் விபத்து நேர்ந்தால் அவர்களது குடும்பங்களுக்கு உதவுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
லைட்மேன்களுக்கு உதவும் ஏ ஆர் ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான் மேற்கொண்ட இந்த முயற்சிக்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பாக எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இதே போன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையில் இசை நிகழ்ச்சி
திரைப்பட துறையில் உள்ள ஒவ்வொருவரும் அவர்களது வருமானத்தில் 1 சதவிகிதத்தை சினிமா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். இதே போன்று விற்கப்படும் ஒவ்வொரு திரைப்பட டிக்கெட்டிலிருந்து ஒரு ரூபாய் வசூலித்து 60 வயதுக்கு மேற்பட்ட திரைப்பட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் கார்பஸ் நிதியை உருவாக்க வேண்டும் என்று ஆர்.கே.செல்வமணி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.