விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தாலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்த ரியாலிட்டி ஷோவாக உள்ளது குக் வித் கோமாளி.
இந்த நிகழ்ச்சியில் வெற்றிகரமாக இதுவரை மூன்று சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது நான்காவது சீசன் சமீபத்தில் துவங்கப்பட்டது.
அதே போல் இந்த முறை, புதிதாக சில கோமாளிகளிலும் இனைந்துள்ளனர் . அதில் குறிப்பாக சிங்கப்பூர் தீபன், ஜிபி முத்து , மோனிஷா, ரவீனா தாஹா ஆகியோர் காமெடியில் பட்டையை கிளப்பி வருகிறார்கள்.
இவர்களை பற்றி தெரிந்த அளவிற்க்கு இவர்களின் குடும்பத்தினர் பற்றி அதிகம் தெரியாது. இந்நிலையில் குக் வித் கோமாளி நடுவர்களின் ஒருவரான வெங்கடேஷ் பட், பிரபல தனியார் ஊடகம் ஒன்றில், மணிமேகலை தன்னுடைய கணவருடன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்னர் மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில், இது போன்ற தனியார் ஊடங்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.