ஒரு சமையல் நிகழ்ச்சியை கூட காமெடியாகவும், கலகலப்பாகவும் நடத்த முடியும் என்பதை நிரூபித்த நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எப்படி பிரபலங்கள் ஆர்வம் காட்டுகிறார்களோ, அதே போல் பல பிரபலங்கள், குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
'குக் வித் கோமாளி' சீசன் 3 கடந்த ஆண்டு நிறைவடைந்த நிலையில், சீசன் 4 நிகழ்ச்சி கடந்த வாரம் துவங்கியது. இதில் முந்தைய சீசன்களில் இருந்த புகழ், குரேஷி, சுனிதா, மணிமேகலை ஆகியோர் மட்டுமே பழைய கோமாளிகள். மற்ற அனைவருமே புதுமுகங்களை இறங்கியுள்ளது 'குக் வித் கோமாளி' டீம். இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கலந்து கொண்டு முதல் வாரத்திலேயே நடையை கட்டிய ஜிபி முத்து கலந்து கொண்டு, இவர் செய்த காமெடி அனைவரையும் கவர்ந்தது.
இந்நிலையில், குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில்... குக்காக பங்கேற்று பிரபலமான சக்தி, தற்போது கார் ஒன்றை வாங்கி அசத்தியுள்ளார். இதுகுறித்த புகைப்பதற்கு வெளியிட்டு, அவர் தெரிவித்துள்ளதை தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். சக்தியுடன் குக் வித் கோமாளி புகழும் இந்த புகைப்படத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனினும் சக்தி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.