சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பாடகியாக ஜொலித்தவர் ஷிவாங்கி. துருதுருவென சுட்டிப்பெண்ணாக இருக்கும் ஷிவாங்கி அடுத்ததாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கி அசத்தினார். அதில் கடந்த மூன்று சீசன்களாக சமைக்கவே தெரியாமல் ஷிவாங்கி செய்த அட்ராசிட்டி வேறலெவல் வரவேற்பை பெற்றது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் காமெடியில் கலக்கிய ஷிவாங்கிக்கு சினிமாவிலும் காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் அவர் முதன்முதலில் சினிமாவில் நடித்த திரைப்படம் டான். சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த இப்படத்தில் பிரியங்கா மோகனின் தோழியாக நடித்திருந்தார் ஷிவாங்கி.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த மூன்று சீசன்களாக கோமாளியாக கலக்கி வந்த ஷிவாங்கி, தற்போது நடைபெற்று வரும் நான்காவது சீசனில் குக் ஆக களமிறங்கி கலக்கி வருகிறார். கடந்த ஆண்டு வரை ஒன்றுமே சமைக்கத் தெரியாமல் குக்குகளிடம் திட்டு வாங்கி வந்த ஷிவாங்கி இந்த ஆண்டு சமையலில் கலக்கி நடுவர்களிடம் பாராட்டு வாங்கி வருகிறார்.
ஷிவாங்கி சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பட்டுச்சேலையில், தலைநிறைய மல்லிப்பூ வைத்து பக்கா தமிழ் பெண்ணாக ஷிவாங்கி நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.