குக் வித் கோமாளி நிகழ்ச்சி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இதுவரை 2 சீசன்கள் முடிந்துள்ளது. தற்போது 3-வது சீசன் நடைபெற்று வருகிறது. 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு போடப்பட்ட சமயத்தில் அனைவரின் ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஷோவாக இந்நிகழ்ச்சி இருந்தது.
பேமஸ் ஆன புகழ்
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைவதற்கு காரணம் அதில் பங்கேற்கும் கோமாளிகள் தான். குறிப்பாக இந்நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பேமஸ் ஆன கோமாளி புகழ். இவர் முதல் இரண்டு சீசனில் அடித்த லூட்டிக்கு அளவே இல்லை. இவர் செய்யும் குறும்புத்தனமான சேட்டைகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இதன் எதிரொலியாக இவருக்கு தற்போது சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
குவியும் பட வாய்ப்பு
சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார். சிறிது நேரம் வந்தாலும் சிரிப்பலைகளை ஏற்படுத்துவிட்டு சென்றார். தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள எதற்கும் துணிந்தவன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் புகழ். இப்படம் நாளை ரிலீசாக உள்ளது.