Director Bala divorce :இயக்குனர் பாலா மனைவியை பிரிய அரசியல் வாரிசு காரணமா? பிரபல நடிகர் வெளியிட்ட திடுக் தகவல்

First Published | Mar 9, 2022, 10:07 AM IST

Director Bala divorce : சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இயக்குனர் பாலாவும் அவரது மனைவியும் முறையாக விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இதன்மூலம் இவர்களது 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

தொடரும் விவாகரத்து 

சினிமா நட்சத்திரங்களின் விவாகரத்து என்பது சமீப காலமாக தொடர்கதை ஆகி வருகிறது. கடந்தாண்டு நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து இசையமைப்பாளர் டி.இமான் விவாகரத்து முடிவை அறிவித்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடிகர் தனுஷும் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் திருமண முறிவை அறிவித்தனர். அந்த லிஸ்டில் புதுவரவாக இயக்குனர் பாலாவுக் இணைந்துள்ளார்.

மனைவியை பிரிந்த பாலா

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் பாலா கடந்த 2004-ம் ஆண்டு முத்துமலர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக எந்தவித பேச்சுவார்த்தையும் இன்றி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இருவரும் முறையாக விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இதன்மூலம் இவர்களது 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

Latest Videos


பயில்வான் ரங்கநாதன் விளக்கம்

இந்நிலையில் இயக்குனர் பாலாவின் விவாகரத்துக்கான காரணம் குறித்து நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: “திருமணத்தின் மீது ஆர்வம் இல்லாமல் இருந்த இயக்குனர் பாலா, குடும்பத்தினரின் வற்புறுத்தலினால், பணக்கார வீட்டு பெண்ணான முத்து மலரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின் இவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டைகள் வரும். இதன்காரணமாக பல நேரங்களில் வீட்டுக்கு வராமல் ஆபிஸிலே தங்கி விடுவாராம் இயக்குனர் பாலா. 

அரசியல் வாரிசு காரணமா?

தன் மீது இயக்குனர் பாலா துளிஅளவும் பாசம் காட்டாததால் முத்துமலர் மனமுடைந்து போனாராம். முத்து மலர் கால்லூரியில் படிக்கும் போதே பிரபல அரசியல் கட்சியின் மூத்த தலைவர் ஒருவரின் மகனை காதலித்து வந்துள்ளார். இயக்குனர் பாலா உடனான திருமண வாழ்க்கை ஒத்து வராததால், அவர் தனது முன்னாள் காதலனுடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளனர். இது பாலாவுக்கு தெரியவந்து பிரச்சனை ஆகி உள்ளது.

இருவர் பக்கமும் தப்பு இருக்கு

அதனை தொடர்ந்து தான் இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து பெற்று உள்ளனர். இந்த விவகாரத்தில் இருவர் பக்கமும் தப்பு உள்ளது என பைல்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இயக்குனர் பாலாவின் விவாகரத்து குறித்து பயில்வான் ரங்கநாதன் அளித்துள்ள பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதையும் படியுங்கள்... BiggBoss Ultimate : பிக்பாஸ் அல்டிமேட்டில் வைல்டு கார்டு எண்ட்ரியாக செல்கிறாரா யாஷிகா?

click me!