பிக்பாஸ் அல்டிமேட்
தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி தற்போது ஓடிடி-க்கென பிரத்யேகமாக நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு பிக்பாஸ் அல்டிமேட் என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணிநேரமும் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
கமலுக்கு பதில் சிம்பு
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை முதல் மூன்று வாரம் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். பின்னர் அரசியல் மற்றும் படப்பிடிப்பு பணிகளில் பிசியாக இருப்பதன் காரணமாக அவரால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவர் பாதியிலேயே விலகினார். அவருக்கு பதில் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் சிம்புவை களமிறக்கியது பிக்பாஸ் குழு.
வைல்டு கார்டு எண்ட்ரி
14 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தற்போது 10 பேர் மட்டுமே உள்ளனர். 4 பேர் எலிமினேட் செய்யப்பட்டனர். இதுதவிர கலக்கப்போவது யாரு பிரபலம் சதீஷ் கடந்த வாரம் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார். இதுதவிர நடிகை லாஸ்லியாவும் வைல்டு கார்டு எண்ட்ரியாக விரைவில் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
யாஷிகா செல்கிறாரா?
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான யாஷிகா, நேற்று ரசிகர்களுடன் சமூக வலைதளம் வாயிலாக கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு ஓப்பனாக பதிலளித்தார் யாஷிகா. அந்த வகையில் ரசிகர் ஒருவர் நீங்கள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக செல்ல உள்ளீர்களா என கேட்டார்.