விஜய் டிவியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்நிகழ்ச்சி கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மக்களுக்கு இந்நிகழ்ச்சி மிகப்பெரிய ஸ்டிரெஸ் பஸ்டராக இருந்தது. இதன் முதல் சீசனில் வனிதா விஜயகுமார் டைட்டில் வின்னர் ஆனார்.
இதையடுத்து கடந்த ஆண்டு நடைபெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கனி டைட்டிலை தட்டிச் சென்றார். அதேபோல் இந்த ஆண்டு சமீபத்தில் முடிவடைந்த மூன்றாவது சீசனில் நடிகை ஸ்ருத்திகா டைட்டில் வின்னர் ஆனார். இது சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும், இந்நிகழ்ச்சி இந்த அளவுக்கு பாப்புலர் ஆவதற்கு காரணம் அதில் உள்ள கோமாளிகள் தான்.
தற்போது தமிழ் சினிமாவின் பிசியான நடிகராகவும் வலம் வருகிறார் புகழ். இவர் கைவசம் டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன. அதில் மிஸ்டர் ஜூ கீப்பர் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் புகழ். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.