Amman Hotel
நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகம் மதுரையின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகிறது. அதில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் அம்மன் உணவக கிளையை சீல் வைத்து மூடக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூரியின் அம்மன் உணவகம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
soori
மருத்துவமனை வளாகத்தில் உள்ள செவிலியர் விடுதிக்கான கழிவுநீர் தொட்டி அமைந்துள்ள பகுதியை அருகே அம்மன் உணவகத்தினர் ஆக்கிரமித்துள்ளதோடு, அதன் அருகே சமைக்க தேவையான காய்கறியை வெட்டுதல், உணவுப் பொருட்களை தயாரித்தல், பாக்கெட் போடுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... வெற்றி விழா கொண்டாடிய விடுதலை 2 டீம் - சூரி, விஜய் சேதுபதி ஆப்சென்ட் ஆனது ஏன்?
Soori Amman Hotel
அதேபோல் எலி, கரப்பான் பூச்சி போன்றவை நடமாடும் இடத்தில் தரமற்ற முறையில் உணவுகள் தயார் செய்யப்படுவதனால் நோய் தொற்று உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையின் சட்ட திட்டங்களுக்கு புறம்பாக இடத்தை ஆக்கிரமித்து, அதில் தரமற்ற உணவுகளை தயாரித்து, கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கி வரும் அம்மன் உணவகத்திற்கு சீல் வைக்க வேண்டும் என அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Complaint against Amman Hotel
வழக்கறிஞர் முத்துக்குமாரின் இந்த புகாருக்கு அம்மன் உணவகம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள பதிலில், காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், தனிநபரின் தூண்டுதலின் பேரிலும் இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சுகாதாரமின்றி உணவுகளை தயாரித்து வரும் அம்மன் உணவகத்துக்கு சீல் வைக்கப்படாவிட்டால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என்று வழக்கறிஞர் முத்துக்குமார் தெரிவித்து உள்ளார்.
இதையும் படியுங்கள்... மாமன் படத்தில் சூரிக்கு தங்கை – ஒரே ஒரு படத்தால சினிமா வாய்ப்பை தட்டி தூக்கிய லப்பர் பந்து நடிகை!