
இயக்குனர் பாலா 'வணங்கான்' திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ள நிலையில், அந்த திரைப்படம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ளது. ஆனால் பொங்கலை குறிவைத்து அஜித்தின் 'விடாமுயற்சி' ரிலீஸ் ஆவதால், வணங்கான் ரிலீஸில் இருந்த பின் வாங்குமா? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், இயக்குனர் பாலா பல சர்ச்சைகளுக்கு பதில் கொடுத்துள்ளார். குறிப்பாக மமிதா பைஜுவை இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் அடித்து விட்டதாக வெளியான ஒரு தகவலுக்கு, உண்மையில் நடந்தது என்ன? என்பது பற்றி பாலா கூறியுள்ள தகவல் வைரல் ஆகி வருகிறது.
துருவ் விக்ரமை வைத்து 'வர்மா' திரைப்படத்தை இயக்கி முடித்த பின்னர், இயக்குனர் பாலா சூர்யாவை வைத்து இயக்குவதாக அறிவித்த திரைப்படம் 'வணங்கான்'. 2022 ஆம் ஆண்டு இந்த படம் குறித்த தகவல் வெளியான நிலையில், சூர்யாவின் 2d நிறுவனமே இந்த படத்தை தயாரித்தது. இந்த படத்திற்கான பூஜைகள் போடப்பட்டு, பட பிடிப்பும் பரபரப்பாக துவங்கியது. ஆனால் திடீரென சூர்யா மற்றும் பாலா இடையே ஏற்பட்ட பிரச்சனையால் 'வணங்கான்' திரைப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது என தகவல் வெளியானது.
அதேநேரம் நடிகர் சூர்யா அதிகாரப்பூர்வமாக 'வணங்கான்' திரைப்படத்தில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டு கூறினார். இதைத்தொடர்ந்து இயக்குனர் பாலா தரப்பில் இருந்தும், சூர்யா 'வணங்கான்' திரைப்படத்தின் கதாபாத்திரத்திற்கு பொருந்தவில்லை என்பதால், அவர் விலகி விட்டதாகவும் விரைவில் வேறு ஒரு நடிகரை வைத்து வணங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவித்தார்.
மலையாளியா இருந்தாலும் விஜய் சேதுபதி முன் திருக்குறள் கூறி அசத்திய அன்ஷிதா; வைரலாகும் வீடியோ!
வணங்கான் திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்ட உடனேயே, இப்படத்தில் ஹீரோயினாக நடித்து வந்த கீர்த்தி செட்டி முதல் சூர்யாவின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வந்த மமீதா பைஜுவரை ஒவ்வொருவராக விலகினர். மமிதா பைஜூ தமிழ் திரை உலகிற்கு புதியவர், மொழி தெரியாத பெண் என்பதால் அதிக டேக் வாங்கியதாகவும் இதனால் மமிதாவை இயக்குனர் பாலா ஷூட்டிங் ஸ்பாட்டில் அடித்ததாகவும் ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் மமிதா பைஜூ, கொடுத்த பேட்டி ஒன்றில் கிட்டத்தட்ட இயக்குனர் பாலா தன்னை அடிக்க கை ஓங்கினார் என்பது போல் பேசி இருந்தார். பின்னர் இது குறித்து விளக்கம் அளித்த மமீதா பைஜூ, நான் கூறிய தகவல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் பேசிய பல விஷயங்களில் சில தகவல் மட்டுமே வெளியாகி உள்ளது. மீதம் கட் செய்யப்பட்டு விட்டது. நான் அவர் என்னை அடித்தார் என்கிற அர்த்தத்தில் பேசவில்லை. உண்மையில் இயக்குனர் பாலாவுக்கும், எனக்கும் எந்த ஒரு மோசமான அனுபவமும் நடக்கவில்ல. நான் சென்னையில் இருந்த போது என்னை இயக்குனர் பாலா அவருடைய மகள் போல் தான் பார்த்துக் கொண்டார். இது முழுக்க முழுக்க வதந்தி என கூறியிருந்தார்.
ட்ரைலருகே இப்படியா? 'கேம் சேஞ்சர்' நாயகன் ராம் சரணுக்கு 256 அடி கட்டவுட் வைத்து மிரட்டும் ரசிகர்கள்!
இதைத்தொடர்ந்து தற்போது பாலாவும் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில், "ஏன் மேக்கப் போட்டேனு கைய தான் தூக்கினேன்" அதற்குள் நான் அடித்து விட்டேன் என செய்தி பரவிடுச்சு. மமிதா என் மகள் மாதிரி, அவரை போய் நான் அடிப்பேனா? அது ரொம்ப சின்ன புள்ள. அதுவும் பொம்பள பிள்ளையை போய் யாராவது அடிப்பாங்களா?. மும்பையில் இருந்து வந்த ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட், எனக்கு மேக்கப் பிடிக்காதுன்னு தெரியாம அவங்களுக்கு மேக்கப் போட்டு விட்டுடுச்சு. ஷார்ட் ரெடி என்று சொன்னதும் மேக்கப் போட மமிதா வந்தார். யார் மேக்கப் போட்டானு சும்மா அடிக்கிற மாதிரி தான் கைய ஓங்கினேன். உடனே அடிச்சிட்டேன்னு செய்தி பரவ ஆரம்பிச்சிடுச்சு என மமிதா பைஜூவை அடித்ததாக பரவிய தகவலுக்கு, பாலா விளக்கம் கொடுத்துள்ளார்.
சூர்யா விலகியதால் தற்போது நடிகர் அருண் விஜயை ஹீரோவாக வைத்து, 'வணங்கான்' படத்தை பாலா இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் ரோஷ்ணி என்பவர் ஹீரோயினாக நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ லான்ச் பிரமாண்டமாக நடந்தது. அதே போல் இந்த படத்தை பார்த்து விட்டு அருண் விஜய் மிகவும் உருக்கமாக பாலாவுக்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்திருந்தார். இதுவரை அருண் விஜய் நடித்த படங்களிலேயே மிகவும் மாறுபட்ட தோற்றத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'விடாமுயற்சி'யை முடித்த கையேடு 'குட் பேட் அக்லீ' படத்தின் அடுத்த கட்ட பணியில் இறங்கிய அஜித்!