
Bigg Boss Julie Protest against Anda Ka Kasam Season 3 Game Show : விஜய் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக ரசிகர்களை தங்கள் பக்கம் இழுத்து வருகிறது. தற்போது கம்பெனி, ஸ்டார்ட் மியூசிக் சீசன் 5, சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10, பிக் பாஸ் தமிழ் சீசன் 10, அண்டாகாகசம் ஆகிய ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு அண்டகாகாசம் என்ற ரியாலிட்டி ஷோ முதல் சீசனை அறிமுகம் செய்தது. இந்நிகழ்ச்சியை மகாபா ஆனந்த் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 2 அணிகள் இடம் பெறுவார்கள். ஒரு அணியில் 3 பிளேயர்ஸ் இடம் பெறலாம்.
மொத்தமாக 3 சுற்றுகள். இதில், முதல் சுற்றில் 30 வினாடிகளில் சேலஞ்ச் செய்த டாஸ்க்கை வெற்றிகரமாக முடிந்தால் அந்த அணிக்கு ஒரு பாய்ண்ட். இல்லையென்றால் எதிரணிக்கு ஒரு பாய்ண்ட். 2ஆவது சுற்றில் ஒரு இமேஜ் காண்பிக்கப்படும். அதில் பொருட்கள், நடிகர்கள், நடிகைகள், விலங்குகள், சாப்பாட்டு வகைகள் என்று இடம் பெற்றிருக்கும். குறிப்பிட்ட வினாடிகளுக்குள் அதனை ஞாபகப் படுத்திக் கொண்டு ஒருவர் சொன்னதை மற்றொருவர் சொல்லாதபடி பார்த்தவற்றை சொல்ல வேண்டும்.
கடைசி சுற்றாக குளுவை வைத்து படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டு. இதற்கு 5 பாய்ண்ட்ஸ். இதில் 3 பாய்ண்ட்ஸ் எடுத்தால் அண்டாகாகசம் குகைக்குள் செல்வார்கள். அதில், 120 வினாடிகளுக்குள் பிடித்த பொருட்களை எடுத்து வட்டத்திற்குள் வைக்க வேண்டும். அதன் பிறகு மந்திரம் சொல்ல வேண்டும். மந்திரம் சரியானால், அவர்கள் எடுத்த பொருட்கள் அவர்களுக்கே சொந்தம்.
இப்படி ஒவ்வொரு சுற்றிலும் இருக்கும். இது தான் அண்டாகாகசம். இந்நிகழ்ச்சிக்கு சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து வந்தனர். 2022 ஆம் ஆண்டு இந்நிகழ்ச்சியின் முதல் சீசன் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதையடுத்து 2023 ஆம் ஆண்டு 2ஆவது சீசன் நடைபெற்றது. இதையடுத்து புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் 29ஆம் தேதி இந்நிகழ்ச்சியின் 3ஆவது சீசன் தொடங்கப்பட்டது.
இதில், ரௌடி ராக்காயில் அணியில் மைனா நந்தினி, பிக் பாஸ் ஜூலி, ஃபரீனா ஆகியோரும் ராங்கி ரங்கம்மா லட்சுமி பிரியா, ஆர்த்தி சுபாஷ் மற்றும் ஷில்பா ஆகியோர் கலந்து கொண்டு விளயாடினார். இதில் முதல் சுற்றை ரௌடி ராக்காயி அணி வெற்றி பெற்றது. ஃப்ரீனா குகைக்குள் சென்று ரூ.2,60,000க்கான பொருட்களை கைப்பற்றி மந்திரத்தை சொல்லி வெற்றி பெற்றார். அந்த தொகையை வைத்து பந்தயம் விளையாடி ரூ.4,50,000க்கான போட்டியில் விளையாடி தோல்வி அடைந்தார்.
இதைத் தொடர்ந்து 2ஆவது சுற்றில் ராங்கி ரங்கம்மா அணி வெற்றி பெற்றது. இதில் அவர்கள் ரூ.1,22,000 க்கான பொருட்களை எடுத்து மந்திரம் சொல்லி ரூ.2.50,000க்கான போட்டியில் விளையாடி வெற்றி பெற்றனர். இதையடுத்து கடைசி சுற்று போட்டி நடைபெற்றது. இதில், முதல் பாய்ண்டை ராங்கி ரங்கம்மா அணி வெற்றி பெற்றது. 2ஆவது பாய்ண்ட்டையும் அவர்கள் கைப்பற்றினர்.
இதையடுத்து, 3ஆவது பாய்ண்டை ரௌடி ராக்காயி அணி கைப்பற்றினர். 4ஆவது திரைப்படத்திறான குழுவில் 4 பேர், பைக், விசில் என்று குளு கொடுக்கப்பட்டது. கடைசி குளுவாக கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பதிலாக கால்பந்து ஸ்டேடியம் இடம் பெற்றது. ஆனால், இந்த குளுவை வைத்து ரௌடி ராக்காயி அணி பிகில் என்று கூறி தவறான பதிலை அளித்தனர். இந்த குளுவிற்கான பதிலாக கோட் என்று மாகாபா அறிவிக்க, அப்போது ஜூலி தன்னுடைய வாக்குவாதத்தை தொடங்கினார்.
கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பதிலாக கால்பந்து ஸ்டேடியம் இடம் பெற்றதாக கூறி ஜூலி போராட்டம் செய்தார். அதற்கு மாகாபா பீச்சில் தன் போராட்டம் பண்ணுவ, இப்போ புரோகிராமிலும் போராட்டம் பண்ண ஆரம்பித்துவிட்டாயா என்று கேள்வி எழுப்பினார். கடைசியாக குளுவில் ஏற்பட்ட தவறுக்காக ரீ மேட்ச் நடைபெற்றது. இதில் இந்த பாய்ண்ட் ராங்கி ரங்கம்மா அணிக்கு கொடுக்கப்பட்டது. எனினும், இந்த சுற்றில் வெற்றி பெற்று, ராங்கி ரங்கம்மா அணி குகைக்குள் சென்று மந்திரத்தை தவறாக சொல்லி தோல்வியை தோல்வியது.