பொங்கல் ரேஸில் இருந்து விலகுகிறதா வணங்கான்? வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

First Published | Dec 30, 2024, 1:04 PM IST

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வணங்கான் திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கி உள்ளதாக தகவல் பரவிய நிலையில், அதுபற்றி படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Bala, Arun Vijay

சூர்யா நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் வணங்கான். பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்ற நிலையில், ஒரு மாதத்தில் ஷூட்டிங் திடீரென நிறுத்தப்பட்டு அப்படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகிவிட்டார். ஷூட்டிங் ஸ்பாட்டில் பாலாவுடன் ஏற்பட்ட மோதலால் தான் சூர்யா வணங்கான் படத்தில் இருந்து விலகியதாக பரவலாக பேசப்பட்டது.

Vanangaan Movie

ஆனால் இதுபற்றி அண்மையில் உண்மையை போட்டுடைத்த பாலா, கன்னியாகுமரி டூரிஸ்ட் ஸ்பாட் என்பதால் அங்கு சூர்யாவை வைத்து ஷூட்டிங் நடத்த முடியவில்லை என்றும் அவரை பார்க்க மக்கள் அதிகளவில் குவிந்து வந்ததால் வேறுவழியின்று இருவரும் வேறு படம் பண்ணிக்கொள்வோம் என பேசி முடிவெடுத்து தான் சூர்யா வணங்கான் படத்தில் இருந்து விலகினார் என்றும், மற்றபடி தங்கள் இருவருக்கும் இடையே வேறு எந்த பிரச்சனையும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்... விஜய் வந்தா நான் ஏன் எழுந்து நிற்கணும்; பல வருட சர்ச்சைக்கு பாலா அளித்த பளீச் பதில்

Tap to resize

vanangaan Movie Poster

சூர்யா விலகிய பின்னர் அவருக்கு பதில் அருண் விஜய் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டானார். பின்னர் அவரை வைத்து வணங்கான் படத்தை தொடங்கிய இயக்குனர் பாலா, ஒருவழியாக அப்படத்தை எடுத்து முடித்து தற்போது அப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதன்படி வருகிற 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ந் தேதி பொங்கல் விடுமுறைக்கு வணங்கான் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் நடைபெற்று வருகிறது.

vanangaan Release Date

இதனிடையே இப்படத்துக்கு போட்டியாக அஜித்தின் விடாமுயற்சி மற்றும் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் ஆகிய படங்களும் பொங்கல் ரேஸில் குதித்ததால் வணங்கான் படத்துக்கு போதுமான தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் வணங்கான் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட உள்ளதாக பேச்சு அடிபட்டது. 

Vanangaan Movie Poster

இந்நிலையில் வணங்கான் படத்தின் ரிலீஸ் பற்றிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அப்படக்குழு இன்று சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜனவரி 10ந் தேதி திட்டமிட்டபடி வணங்கான் ரிலீஸ் ஆகும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் அஜித்தின் விடாமுயற்சி படத்துடன் பாலாவின் வணங்கான் ரிலீஸ் ஆவது உறுதியாகி இருக்கிறது.

இதையும் படியுங்கள்... கால்ஷீட் கொடுத்தாலும் கமல், ரஜினியுடன் படம் பண்ண மாட்டேன் - இயக்குனர் பாலா பளீச் பதில்

Latest Videos

click me!